Clove Benefits: தினமும் கிராம்பு சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்

First Published Sep 24, 2022, 8:03 AM IST

Clove Benefits: கிராம்பு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை அளவோடு சாப்பிட்டால் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் சமையலறையில் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களில் கிராம்புக்கு முக்கிய இடம் உண்டு. இவை உணவின் சுவை மற்றும் நறுமணத்தையும் மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கிராம்புகளை தவறாமல் சாப்பிடுவது உங்களை பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும். ஆயுர்வேதத்தில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

 கிராம்பின் நன்மைகள்

கிராம்புகளில் யூஜெனால் என்ற கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கீல்வாதம் போன்ற நோய்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க இந்த கிராம்பு உதவுகிறது. இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. கிராம்பு எண்ணெய் வயிற்று வலியைப் போக்கும். சுவாசம் மற்றும் செரிமானம் போன்ற பல பிரச்சனைகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. ஆனால் இந்த கிராம்புகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும்.

மேலும் படிக்க...Purattasi Non Veg: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது, அறிவியல் மற்றும் ஆன்மீகம் என்ன சொல்லுது தெரியுமா

पाचन

 கிராம்புகளின் மருத்துவ பண்புகள்:

கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே, ஃபைபர், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.  

அஜீரணத்தைப் போக்க உதவும்.

இரவு படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் மலச்சிக்கல், வயிற்று வலி (Stomach Pain), இரைப்பை மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவும்.
 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

சளி, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் வைரஸ் தொற்றுகள்
ஏற்படுவது இந்த நேரத்தில் பொதுவானவை. இது போன்ற நேரங்களில் கிராம்புகளை எடுத்துக் கொண்டால் தொற்றுகள் குறையும். ஆம், கிராம்பு வைரஸ் எதிர்ப்பு மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன.

மேலும் படிக்க...Purattasi Non Veg: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது, அறிவியல் மற்றும் ஆன்மீகம் என்ன சொல்லுது தெரியுமா

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கிராம்புகளை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது புதிய செல்கள் வளர்ச்சிக்கு உதவும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இவற்றில் உள்ள தைமால் மற்றும் யூஜெனால் போன்ற செயலில் உள்ள கலவைகள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 


நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க:

வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும். இன்சுலின் சுரப்பு மற்றும் பீட்டா செல் செயல்பாடும் மேம்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க...Purattasi Non Veg: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது, அறிவியல் மற்றும் ஆன்மீகம் என்ன சொல்லுது தெரியுமா

மூட்டு வலியைக் குறைக்கிறது

கிராம்புகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் மாங்கனீசு உள்ளது. அவை எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுகின்றன. இது எலும்பு திசுக்களையும் சரி செய்கிறது. இது மூட்டு வலியைக் குறைக்க அல்லது தடுக்கவும் உதவுகிறது.

click me!