Vastu tips: தூங்கும் போது ஏன் தவறான திசையில் தலை வைக்க கூடாது, வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்க சிறந்த திசை எது

First Published | Sep 24, 2022, 12:39 PM IST

Vastu tips: ஒருவர் நிம்மதியான இரவு தூக்கத்தை உறுதி செய்ய தங்கள் படுக்கையறையில் எப்படி தூங்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம்.

Vastu tips:

ஒருவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அதற்கு வாஸ்து குறைபாடுகளும் ஒரு வித காரணமாக இருக்கலாம். ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அத்துடன் குடும்பத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. 

Vastu tips:

எனவே, ஒருவர் நிம்மதியான இரவு தூக்கத்தை உறுதி செய்ய, உங்கள் படுக்கையறை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்லாமல், தூங்கும் போது நீங்கள் எதிர்கொள்ளும் திசையையும் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, கணவன்-மனைவி இருவரும் தங்கள் படுக்கையறையில் எப்படி தூங்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க...நவராத்திரி நாளில் துர்கா தேவியின் நேரடி அருளை பெறும் 3 ராசிகள்..அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளில் நீங்களும் ஒருவரா?

Tap to resize

Vastu tips:

எந்த திசையில் தூங்குவது தம்பதிகளுக்கு நல்லது

தம்பதிகளுக்கு படுக்கையறையை வடிவமைக்கும் போது, சில வாஸ்து விதிகளை மனதில் வைத்திருப்பது அவசியம். படுக்கையை தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வாஸ்து படி, மனைவி மகிழ்ச்சியான திருமண உறவை மேம்படுத்த கணவரின் இடது பக்கத்தில் தூங்க வேண்டும். குறிப்பாக, வீட்டின் குடும்ப தலைவர் நிச்சயாமாக தெற்கு திசையில் தூங்க வேண்டும் என்று வாஸ்து கூறுகிறது. இதனால், கணவன் -மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். 
 

Vastu tips:

ஏன் வடக்கு திசையில் தூங்க கூடாது:

ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் மோசமாவதோடு, செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என நம்பப்படுகிறது. முக்கியமாக பிணங்களின் தலையை வடக்கு திசையில் தான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.


மேலும் படிக்க..Vastu: படுக்கை அறையில் நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு, வாஸ்து, சாஸ்திரத்தின் படி இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
 

Vastu tips:

இதற்கான அறிவியல் காரணம்:

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, தான் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது.

Vastu tips:

தூங்குவதற்கு தெற்கு திசை ஏன் சிறந்த ?

ஒருவர் தலையை தெற்கு நோக்கியும், கால்களை வடக்கு நோக்கி தூங்குவது சிறந்தது என்று வாஸ்து சாஸ்திரத்தின் படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரின் ன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  புகழ்,வெற்றி போன்ற செல்வத்தை  பெருகுவதற்கு இது தூங்குவதற்கான சிறந்த திசையாகும்.

மேலும் படிக்க..Vastu: படுக்கை அறையில் நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு, வாஸ்து, சாஸ்திரத்தின் படி இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!

Vastu tips:

கிழக்கு ஏன் சிறந்த தூக்க திசை?

ஒருவர் கிழக்கு நோக்கி கால்களையும் மேற்கு நோக்கி கால்களையும் வைத்து தூங்குவது நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது. இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. இது ஒருவரின்  ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், கிழக்கு உதய சூரியனின் திசையாகும் மற்றும் தியானம் மற்றும் பிற ஆன்மீக நடவடிக்கைகளுக்கு நல்லது என்று நம்பப்படுகிறது.

Latest Videos

click me!