Photo Courtesy: Instagram
பணிச்சுமை, மனஅழுத்தம் காரணமாக தற்போதைய காலத்தில் இளம்வயதினருக்கும் சொட்டை விழுதல், முடி உதிர்வு, அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாகவே அனைவரும் அடர்த்தியான கூந்தல் அல்லது முடியை பெற விரும்புகிறோம். ஆனால் தலைமுடிக்கென தனிக்கவனம் செலுத்த தவறிவிடுகிறோம்.
நம் தலைக்கென முறையான கவனிப்பும் அக்கறையும் எடுத்துக்கொண்டால், தலைமுடி சம்பந்தப்பட்ட பாதி பிரச்சனைகளை நீக்கிவிடலாம். தலைக்கு சரியான முறையில் எண்ணெய் தேய்பதே ஒரு வகை சிகிச்சை தான். ஹாட் ஆயில் தெரபி (Hot Oil Therapy) முடியை பளபளப்பாக்கும். ஆனால் முடி உதிரும் வாய்ப்பு உள்ளது.
Image: Getty
Hot Oil Therapy
ஹாட் ஆயில் தெரப்பி என்றவுடன், சூடான எண்ணெயை தலையில் தேய்க்கக்கூடாது. தலைகுளித்துவிட்டு வந்து, ஈரத்தலையுடன் இருக்கும் போதும் எண்ணெய் தேய்க்கக்கூடாது. பிறகு எப்படி தேய்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.
1.நம் தலைக்கென சிறிது நேரம் ஒதுக்கி முறையாக பேணிக்காத்து வந்தாலே பாதி பிரச்சனையை குறைத்துவிடலாம்.
2. Hot Oil Therapy-ல் கூட முடிக்கு சூடான எண்ணெய்யை தேய்க்கக்கூடாது. சூடான எண்ணெ தலையில் தேய்க்கும் போது, பொடுகு பிரச்சனை வரும். மேலும், அதுமட்டுமல்லாமல் எரிச்சல், அரிப்பு போன்றவைமு் ஏற்பட வாய்ப்பு அதிகம்.. எனவே முடி சேதமடையாமல் இருக்க சூடான எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..
3 ஈரமான தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தவிர்ப்பது நல்லது. இது பலருக்கும் முடி உதிர்வுப் பிரச்ணைதை ஏற்படுத்திவிடும்.
4. தலைமுடிக்கு எண்ணெய் வைத்த பின்னர், முடியை இருக்கமாக கட்டி கிளிப் அணிவதை தவிர்ப்பது நல்லது. இது சிலருக்கு முடி உதிர்வு அல்லது தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும்.
5. இரவு தூங்கும் முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைக்க கூடாது. இதனால், முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்ற ஒவ்வாமை ஏற்பலாம்
தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பகவே தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. காலையிலும் தலை முடிக்கு எண்ணெய் வைத்துவிட்டு நெடுநேரம் அப்படியே விட்டுவிடக்கூடாது. குளிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டால் சறிதளவு எண்ணெய் வைத்தாலே போதுமானது.
6.தலைமுடிக்கு அதிகமாக எண்ணெய் தடவ கூடாது. உச்சந்தலை மற்றும் அடிமுடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் தேய்ப்பதே நல்ல பலன் தரும்.