குழந்தைகளுக்கு இந்த விஷயங்களை தவறாமல் கற்றுக் கொடுங்கள்.. அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் உதவும்..

First Published | Aug 10, 2024, 6:33 PM IST

உங்கள் குழந்தையின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சில தினசரி நடைமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Parenting Tips Tamil

ஒரு பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. நம் குழந்தைகளுடன் சேர்ந்து நாமும் கற்றுக்கொள்ளவும் எண்ணற்ற வாய்ப்புகளுடன் மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அனுபவமாகும். நாம் என்ன செய்கிறோம் என்பது மட்டுமல்ல, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுடன் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்புகள் மிகவும் முக்கியமானவை. இந்த நடைமுறைகள் நம் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பது மட்டுமல்லாமல், பெற்றோராக நமது சொந்த அனுபவத்தை வளப்படுத்துகிறது. உங்கள் குழந்தையின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சில தினசரி நடைமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Parenting Tips Tamil

குழந்தை வளர்ப்பு பெற்றோருக்குரிய நுட்பங்களின் தொகுப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல. ஆனால் நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை திறன்கள். ஒருவருடன் எவ்வாறு சரியாகத் தொடர்புகொள்வது, இருக்கும் பணத்தில் வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது போன்ற வாழ்க்கைத் திறன்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது அவசியம். உங்கள் குழந்தைகள் சிறந்த மனிதர்களாக, அன்பு, வலிமை மற்றும் ஞானத்துடன் உலகைக் கையாளும் திறன் கொண்டவர்களாக மாற உதவும். வாழ்க்கைத் திறன்களில் விமர்சன சிந்தனை, உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவை அடங்கும். இவற்றில் கவனம் செலுத்துவது, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும்.

Tap to resize

Parenting Tips Tamil

குழந்தைகளின் சில நடத்தைகள் அல்லது சூழ்நிலைகள் ஏன் பெற்றோராகிய நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். உண்மையில் நமது குழந்தையின் நடத்தையில் மாற்றம் தேவையா, அல்லது நமது கருத்தும் எதிர்வினையும் சரி செய்யப்பட வேண்டுமா? என்பதை யோசிப்பது மிகவும் முக்கியம். நமது உணர்வுகளை குழந்தைகளிடம் பிரதிபலிப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அளிக்க உதவும். இந்த சுய அறிவு, நம் குழந்தையுடனான நமது உறவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியை அமைக்கிறது.

Parenting Tips Tamil

"நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்" என்ற கொள்கை பெற்றோருக்கு மிகவும் பொருத்தமானது. நம் குழந்தையின் எதிர்மறையான நடத்தைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் நேர்மறையான குணங்கள் மற்றும் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தையின் நேர்மறையான விஷயங்களை பாராட்டி அவர்களை வலுப்படுத்துங்கள். இந்த நேர்மறை வலுவூட்டல் குழந்தைகளுக்கு சுயமரியாதையை வளர்க்க உதவுகிறது. மேலும் நேர்மறையான செயல்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது, நிலையான திருத்தம் மற்றும் விமர்சனத்தின் தேவையை குறைக்கிறது.

Parenting Tips Tamil

ஒரு பெற்றோராக, நம் குழந்தையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது எளிது. இருப்பினும், திறமையான பெற்றோருக்கு நம்மை நேசிப்பதும் கவனித்துக்கொள்வதும் முக்கியம். சுய பாதுகாப்பு என்பது உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை உள்ளடக்கியது. நாம் நன்றாக ஓய்வெடுக்கும்போது, ​​ஆரோக்கியமாக, உணர்ச்சிப்பூர்வமாக சமநிலையில் இருக்கும்போது, ​​நம் குழந்தைகளுடன் பொறுமையாகவும், அன்பாகவும் இருக்க முடியும். அதாவது உங்கள் உடல்நலனை நீங்கள் கவனித்துக் கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தங்களைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கற்பிக்க முடியும்.

Parenting Tips Tamil

பாதுகாப்பான மற்றும் அன்பான வீட்டுச் சூழலை உருவாக்குவது நமது குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். "பாதுகாப்பான வீடு" என்பது குழந்தைகள் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், நிபந்தனையின்றி நேசிக்கப்படுவதையும் உணரும் ஒன்றாகும். குழந்தைகள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் வசதியாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள். இந்த பாதுகாப்பு உணர்வு குழந்தைகள் உணர்ச்சி ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளர உதவுகிறது. 

Latest Videos

click me!