மேட்ரிமோனி தளங்களில் போலி ஐடிக்களைக் கண்டுபிடிப்பது எப்படி? இந்த ஐடியாவை கவனிங்க!!

Published : Aug 12, 2024, 11:02 PM IST

மேட்ரிமோனியல் தளங்களில் சிலர் தவறான விவரங்களைக் குறிப்பிட்டு போலியான சுயவிவரங்களை உருவாக்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற மோசடி முயற்சிகளை அடையாளம் காண சில வழிகள் உள்ளன.

PREV
18
மேட்ரிமோனி தளங்களில் போலி ஐடிக்களைக் கண்டுபிடிப்பது எப்படி? இந்த ஐடியாவை கவனிங்க!!
Matrimony Website

மேட்ரிமோனியல் தளங்களில் சிலர் தவறான விவரங்களைக் குறிப்பிட்டு போலியான சுயவிவரங்களை உருவாக்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள். அந்த போலியான ஐடிகளைப் பற்றி ஒருபோதும் பீதி அடைய வேண்டாம். மேட்ரிமோனி தளங்களில் இதுபோன்ற மோசடி முயற்சிகளை அடையாளம் காண சில வழிகள் உள்ளன.

28
Matrimony App

மேட்ரிமோனியில் போலி சுயவிவரங்களை அடையாளம் காண்பது எளிது. ஏனெனில் அவை தவறான புரொஃபைல் படத்துடன் இருக்கும். எந்த சுயவிவரத்தின் பின்னணியையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். எவருடனும் முதல் சந்திப்பிலேயே தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

38
Matrimony Service

புகைப்படம், மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை யார் பார்க்கலாம், பார்க்கக் கூடாது என்பதைத் தேர்வுசெய்யும் வாய்ப்பும் உள்ளது. இது உங்கள் தகவலை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். முன்பின் அறிமுகமில்லாத யாரையும் விரைவில் நம்பிவிடக் கூடாது.

48
Matrimonial sites

நீங்கள் ஏதேனும் ஒரு சுயவிவரத்தை விரும்பி, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால், அவர்கள் கொடுத்திருக்கும் தகவலைப் பார்த்து மட்டும் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் ஒன்றுக்கு இரண்டு முறை விவாதிக்கவும். வேறொரு சமூகம், மதம், சாதி, நாட்டிலிருந்து ஒருவரை தேர்வு செய்வதாக இருந்தால், அவர்களின் பணியிடம், பூர்வீகம் ஆகியவற்றைப் பார்க்கவும். மேட்ரிமோனி தளங்களில் சரிபார்க்கப்பட்ட ஐடியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது நம்பகத்தன்மையை உறுதி செய்ய மிகவும் உதவியானது.

58
Matrimonial Ad

மகள்/மகன் அல்லது உறவினருக்கு மேட்ரிமோனியல் தளத்தில் ஒரு ஐடி உருவாக்க முடிவு செய்தால், அந்தத் தளம் அல்லது செயலி நம்பகமானதா இல்லையா என்பதைப் பார்க்கவும். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், மேட்ரிமோனியல் தளத்தில் உங்கள் சுயவிவரத்தை தனிப்பட்டதாக மாற்றும் வசதியை பயன்படுத்தலாம்.

68
Matrimony service in Tamil

ஆரம்பத்தில் தனிப்பட்ட சந்திப்பைத் தவிர்க்கலமாம். அறிமுகமான உடனேயே நேரில் சந்திப்பது பெரிய தவறாக முடியலாம். பாதுகாப்பற்ற இத்தகையை சந்திப்பி விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.

78
Fake ID in Matrimony

சுயவிவரத்தில் அடிக்கடி திருத்தங்களைச் செய்தால், சில சமயங்களில் அது போலி சுயவிவரமாக இருக்கலாம். யாராவது வீடியோ கால் அல்லது மெசேஜ் மூலம் தொந்தரவு செய்தால், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம். அவர்களை பிளாக் செய்துவிடுவது நல்லது. யாரையும் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன் குடும்பம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

88
Matrimony guidelines

ஏதாவது காரணத்தைச் சொல்லி பணம் கேட்பவர்கள் மோசடி செய்பவர்களாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எந்தவொரு மேட்ரிமோனியல் தளத்திலும் நுழைவதற்கு முன், அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சிறந்த மற்றும் பாதுகாப்பான மேட்ரிமோனியல் தளங்களில் உங்கள் விவரங்களைப் பதிவுசெய்து ஐடியை உருவாக்குங்கள்.

click me!

Recommended Stories