USA Salary: அமெரிக்காவில் மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்! செலவு போக கையில் எவ்வளவு மிஞ்சும் தெரியுமா?

Published : Jul 28, 2026, 09:05 AM IST

அமெரிக்கா போனா கை நிறைய சம்பாதிக்கலாம்னு நம்ம ஊர்ல பலரும் நினைக்கிறாங்க. ஆனா, அங்கே மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிச்சா கூட, செலவு போக கையில எவ்வளவு நிக்கும்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க. வாங்க பார்க்கலாம்.

PREV
16
இளைஞர்களின் அமெரிக்க கனவு!
இந்தியாவிலிருந்து பல இளைஞர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக கனவு காண்கிறார்கள். மாதம் $6,000 (சுமார் ₹5 லட்சம்) சம்பாதித்தால், வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், டாலரில் சம்பாதித்து டாலரிலேயே செலவு செய்யும்போதுதான் நிஜம் புரியும்.
26
சம்பளத்தில் முதல் வெட்டு: வரிகள்!
அமெரிக்காவில் நீங்கள் சம்பளம் வாங்கியதும், முதலில் கை வைப்பது வரிகள்தான். ஃபெடரல், ஸ்டேட், சோஷியல் செக்யூரிட்டி என சுமார் 20% முதல் 25% வரை வரி பிடித்தம் செய்யப்படும். அதாவது, $6,000 சம்பளத்தில், உங்கள் கைக்கு வருவது சுமார் $4,500 முதல் $4,800 மட்டுமே.
36
செலவுகளில் சிம்ம சொப்பனம்: வீட்டு வாடகை
செலவுகளில் பெரும் பகுதி வீட்டு வாடகைக்கே போய்விடும். கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற நகரங்களில் ஒரு 1BHK வீட்டுக்கு $1,800 முதல் $2,500 வரை வாடகை கேட்கிறார்கள். கரண்ட், கேஸ், வைஃபை பில்களுக்கு தனியாக மாதம் $300 வரை செலவாகும்.
46
சாப்பாடு மற்றும் மளிகை செலவுகள்
வெளியில் சாப்பிட்டால் செலவு எகிறிவிடும். வீட்டிலேயே சமைத்தாலும், இந்திய மளிகைப் பொருட்களின் விலை அதிகம். காய்கறிகள், அரிசி என எல்லாமே காஸ்ட்லி. வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலே மாதம் $500 (சுமார் ₹42,000) வரை செலவாகும்.
56
கார் EMI, இன்சூரன்ஸ்... இதெல்லாம் தனி!
அமெரிக்காவின் பல நகரங்களில் கார் ஒரு அத்தியாவசியத் தேவை. காரின் EMI, பெட்ரோல், இன்சூரன்ஸ் என மாதம் $700 வரை செலவு பிடிக்கும். மருத்துவச் செலவுகள் மிக அதிகம் என்பதால், ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம். இதுபோக, போன் பில், ஷாப்பிங் என இதர செலவுகளும் உண்டு.
66
கடைசியா கையில எவ்வளவு நிக்கும்?
இவ்வளவு செலவுகளுக்குப் பிறகு, தனியாக வசிக்கும் ஒருவரால் மாதம் $500 முதல் $1,000 வரை (₹40,000 - ₹80,000) சேமிக்க முடிந்தால் அது பெரிய விஷயம். குடும்பத்துடன் வசித்தால் அல்லது காஸ்ட்லியான நகரத்தில் இருந்தால், சேமிப்பது இன்னும் கடினம். சம்பளம் அதிகம் என்றாலும், வாழ்க்கைச் செலவும் அதிகம் என்பதே அமெரிக்காவின் நிஜம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories