Uncleaned AC
ACகள், தற்பொழுது ஒரு வீட்டின் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. முன்பெல்லாம் எல்லா அறையிலும் மின்விசிறிகள் ஜோராக ஓடி வந்த நிலையில், இப்போது அனைத்து அறைகளையும் நிரப்ப தொடங்கி இருக்கிறது குளிர்சாதன பெட்டிகள். ஆனால் அதை சரியாக பராமரிக்கிறோமா என்று கேட்டால் அது நிச்சயம் சந்தேகம் தான். சில வீடுகளில் குளிரூட்டிகளை பொருத்திய நாளிலிருந்து அதை கவனிக்காமலேயே விட்டுவிட்ட கதைகளும் உண்டு. ஆனால் அப்படி செய்தால் நம் உடல் நலத்திற்கு அது மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்துகிறது.
அப்ப தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையாதா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
AC Filter
சுவாச பிரச்சனை
அறிஞர்களின் கூற்றுப்படி ஒரு குளிரூட்டிகளில் உள்ள பில்டரை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்திட வேண்டுமாம். அப்படி செய்யாமல் விடுவது அந்த குளிரூட்டிகளுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமோ அதைவிட இரண்டு மடங்கு அதன் அருகில் படுத்து உறங்கும் மனிதர்களுக்கு பெரிய உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதில் முதலாவதாக வருவது சுவாசக் கோளாறு தான். தூய்மை செய்யப்படாத பில்டர்களைக் கொண்ட குளிரூட்டிகளை சீக்கிரம் பாக்டீரியா மற்றும் பிற கேடு விளைவிக்கும் விஷயங்கள் பல உருவாகிறது. அதிலிருந்து வரும் காற்றை சுவாசிப்பதால் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
Uncleaned AC in Room
தோல் சம்பந்தமான பிரச்சனைகள்
நமது வீட்டில் உள்ள ஏசியை சரியாக பராமரிக்காமல் இருக்கும் பொழுது அதன் அருகில் படுத்து உறங்கும் மனிதர்களின் தோல்களையும் பெரிய அளவில் அவை பாதிக்கின்றது. கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய அளவில் அதிலிருந்து வெளியேறும் அழுக்குகள் அந்த அறைக்குள் படுத்திருக்கும் நம் மீது தான் வந்து படுகிறது. ஒரே நாளில் நமது தோலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றாலும், முறையாக சுத்தம் செய்யப்படாத ஏசிகள் அருகே படுப்பதால் நாளடைவில் நமக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
Sleeplessness
தூக்கமின்மை மற்றும் சோர்வு
சரியாக தூய்மை செய்யப்படாத ஏசி-களிலிருந்து வெளியேறும் அசுத்தமான காற்றால் நமது உடலில் சீக்கிரம் நீர்சத்து இழக்கப்படுகிறது. அதனால் நமக்கு தூக்கத்தில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அதிக நேரம் இது போன்ற ஏசி-களுக்கு அருகில் படுப்பதால் உடல் சோர்வும் ஏற்படுகிறது. என்ன தான் அயர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கினாலும் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாத ஒரு அனுபவத்தை தூய்மை செய்யப்படாத ஏசிக்கள் கொடுக்கின்றது என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும்! உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கும்!