இந்த ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும்! உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கும்!

First Published | Oct 18, 2024, 4:54 PM IST

ஒரு ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும். அந்த ஜூஸ் என்ன..? என்ன குடித்தால் முகத்தில் பொலிவு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Glowing Skin

பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் அழகாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆசை அதிகமாகவே இருக்கும்.

Glowing Skin

இந்த ஜூஸ் உங்களுக்கு அழகை மட்டுமல்ல.. ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. கேரட், தக்காளி ஜூஸ் தான் அது. இந்த ஜூஸ் தயாரிக்க தேவையானவை: 2-3 கேரட், 2 தக்காளி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள். 

இந்த ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: சருமத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிறைந்தது. தக்காளியில் லைகோபீன் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சருமத்தின் வயதான தோற்றத்தை குறைக்கிறது.

Tap to resize

Carrot Juice

கேரட் தக்காளி ஜூஸ் குடிப்பதால் மேலும் பல ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். ஏனெனில் கேரட் மற்றும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்.

தக்காளி சாற்றில் லைகோபீன் உள்ளது, இது இருதய நோய், வீக்கம் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

Carrot Tomato Juice

இதய ஆரோக்கியம்

கேரட் மற்றும் தக்காளியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்

காய்கறிகள் நிறைந்த உணவு உங்கள் செரிமான மண்டலத்தை சரியாக வேலை செய்ய உதவும்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

கேரட் மற்றும் தக்காளி கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக இருப்பதால், அவை இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யாது.

Latest Videos

click me!