எந்த வெங்காயத்தை வாங்கலாம்?
வெங்காயம் வாங்கும்போது உலர்ந்தவற்றை வாங்க வேண்டும். வெங்காயங்கள் அளவில் பெரிதாகவும், தோல் அதிகம் இருக்கும்படியும் பார்த்து வாங்குங்கள். குறிப்பாக வெங்காயத்தில் புள்ளிகளோ, ஈரப்பதமோ இருந்தால் வாங்க வேண்டாம்.
வெங்காயம் நீண்ட காலம் அழுகாமல் இருக்க..
வெங்காயத்தை உருளைக்கிழங்குடன் வைப்பது நல்லதல்ல. இதனால் விரைவில் வெங்காயம் கெட்டுவிடும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் கூடைகளில், குறிப்பாக துளைகள் உள்ள பிளாஸ்டிக் கூடையில் வைப்பது வெங்காயத்தை கெடாமல் வைக்கும். பிளாஸ்டிக் பையில் கட்டி வைக்கக் கூடாது. காற்றோட்டம் அவசியம்.
வெங்காயம் வாங்கும்போதே உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும். மழைகாலத்தில் ஈரப்பதமான வெங்காயம் விரைவில் அழுகலாம். அதில் கருப்பு வண்ண கறைகள் இல்லாமல் இருப்பது அவசியம். வெங்காயத்தை காகிதத்தில் போட்டு திறந்தவெளியில் வைக்க வேண்டும். காகிதத்தில் எந்த வாசனையும் இருக்கக்கூடாது.
வெங்காயத்தை வைத்திருக்கும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். இருண்ட, உலர்ந்த இடத்தில் வைக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது உரிக்கப்படாத வெங்காயத்தை வைக்கக் கூடாது. உரித்த வெங்காயத்தை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மூடி வைக்கலாம்.