Towel Washing Tips: ஒரு டவலை ரொம்ப வருஷமா யூஸ் பண்றீங்களா? இதை படியுங்கள் முதலில்.! நிபுணர்கள் சொல்ற எச்சரிக்கை இதுதான்.!

Published : Jun 18, 2026, 02:20 PM IST

Towel Washing Tips: முகம் துடைக்கும் டவலை தூய்மையாக வைத்திருப்பது, நமது முகத்தின் ஆரோக்கியத்துடன் நேரடியான தொடர்புடையது. முகம் துடைக்கும் டவலை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும், எப்போது மாற்ற வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். 

PREV
16
Towel Washing Tips

முகத்திற்கு பயன்படுத்தப்படும் சிறிய டவல்களை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்திய பிறகு உடனே துவைத்து விடுவது நல்லது. அதாவது ஒரு நாளில் இரண்டு முறை முகம் கழுவுகிறீர்கள் என்றால் தினசரி அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டவலை துவைக்க வேண்டும். முகம் துடைக்கும் பொழுது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், எண்ணெய் மற்றும் காற்றில் உள்ள தூசிகள் டவலில் ஒட்டிக் கொள்கின்றன. ஈரமான டவலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மிக வேகமாக வளரும் என்பதால் அதை மீண்டும் முகத்தில் வைக்கும் பொழுது சரும பாதிப்புகள் ஏற்படும்.

Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

26
டவலை எத்தனை முறை துவைக்க வேண்டும்?

சரும நிபுணர்களின் கூற்றுப்படி, டவலை பயன்படுத்தியப் பின்னர், அதை முழுமையாக காய வைக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால் அதே டவலை மறுபடியும் மூன்று முதல் நான்கு முறை பயன்படுத்திவிட்டு துவைக்கலாம். ஒவ்வொரு முறையும் டவலைப் பயன்படுத்திய பிறகும் அதை ஒரு ஹேங்கரில் காய வைத்து முழுமையாக காய்ந்த பின்னர் ஐந்து முதல் எட்டு முறை கூட பயன்படுத்தலாம். ஆனால் டவல் பயன்படுத்திவிட்டு தரையிலோ பெட் மேலேயோ சுருட்டி போடும் பழக்கம் இருப்பவர்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் துவைப்பது நல்லது.

Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

36
ஜிம் செல்லும் பழக்கம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

ஜிம் செல்லும் பழக்கம் இருப்பவர்கள் சிறிய டவலை பயன்படுத்துவது நல்லது. ஒர்க்அவுட் முடிந்த பின்னர் பயன்படுத்திய டவலை தினமும் துவைக்க வேண்டும். நம் வியர்வையும், ஜிம்மில் இருக்கும் பாக்டீரியாக்களும் அந்த டவலில் விரைவாக ஒட்டிக் கொள்ளும். உங்களுக்கு அலர்ஜி அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் இருந்தால் தினமும் டவலை துவைப்பது நல்லது. அதே சமயம் கை கழுவும் சிங்க் அருகில், வைக்கப்பட்டுள்ள கை துடைக்கும் ஹேண்ட் டவலை ஒரு நாளைக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

46
டவலை எத்தனை முறை மாற்ற வேண்டும்

டவலை நாம் எவ்வளவுதான் துவைத்து சுத்தமாக வைத்திருந்தாலும் காலப்போக்கில் அதன் இலை நார்கள் தேய்ந்து பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை அதிகரித்து விடும். பொதுவாக முகத்திற்கு பயன்படுத்தப்படும் டவலை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பயன்படுத்திவிட்டு, அதை மாற்ற வேண்டும். டவலை துவைத்தப் பிறகும் அதில் ஒரு விதமான மக்கிய வாடகை அல்லது துர்நாற்றம் வீசினால் அதன் ஆயுட்காலம் முடிந்து விட்டது என்று பொருள். எனவே உடனே அதை மாற்ற வேண்டும். டவல் மென்மையை இழந்து சொரசொரப்பாக மாறிவிட்டால், அதை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது முகத்தில் கீறல்களை ஏற்படுத்தலாம்.

56
டவல் பராமரிப்புக்கான சில முக்கிய டிப்ஸ்

உடம்புத் துடைக்கும் பெரிய டவலில் முகத்தை துடைக்க கூடாது. முகத்திற்கு என எப்போதும் தனியான டவலை பயன்படுத்த வேண்டும். உங்கள் டவலை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் எந்த சூழ்நிலையிலும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பயன்படுத்திய பிறகு டவலை அப்படியே சுருட்டி வைக்காமல் காற்றோட்டமான இடத்திலோ அல்லது வெயிலிலோ நன்றாக உலர வைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் டவலில் தான் கிருமிகள் பெருகும். டவல்களை துவைக்கும் பொழுது கிருமி நாசினி அல்லது வெந்நீர் பயன்படுத்தி துவைப்பது கிருமிகளை அழிக்க உதவும்.

66
டவலை பிரஷ் ஆக மாற்ற எளிய வழி

உங்கள் டவலில் இருந்து கெட்ட வாடை அல்லது துர்நாற்றம் வீசினால் அதில் ஏற்கனவே பாக்டீரியா வளர்ந்து விட்டதாக அர்த்தம். அந்த அது போன்ற சமயத்தில் டவ சுடுதண்ணீர் மற்றும் ஒரு கப் வெள்ளை வினிகர் சேர்த்து தொலைத்தால் பாக்டீரியாக்கள் அழிந்து டவல் மீண்டும் பிரஷ் ஆகும் ஆனால் டவல் அதிக சேதமானதாக உணர்ந்தால் அதை மாற்றி விடுவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories