அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?

Published : Mar 20, 2026, 11:53 AM IST

Beer: வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் மதுபான கடைகளுக்கு சென்று சரக்கு வகைகளை விட அதிகளவில் கூலிங் பீரையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

PREV
16

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கோடை வெயில் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் மதுபான கடைகளுக்கு சென்று சரக்கு வகைகளை விட அதிகளவில் கூலிங் பீரையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளைவிட சரக்கு வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு வகைகளைவிட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

26

இந்நிலையில் நமது நாட்டில் அதிக ஆல்கஹால் அளவு இல்லாத பீர் பிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதில் பட்வைசர் (Budweiser) நாட்டில் அதிகம் (2%) விற்பனையாகும் பீர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இது ஒரு சிறந்த பிராண்ட் என்று பலர் நம்புகிறார்கள்.

36

யுனைடெட் பிரூவரிஸ் குழுமத்தின் மற்றொரு பீர் பிராண்டான கல்யாணி பிளாக் லேபிள் (Kalyani black Label) மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது மேற்கு வங்காளத்துடன் சேர்த்து சில வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த பிராண்ட் விற்பனையாகிறது. கல்யாணி பிளாக் லேபிள் பீர் விற்பனையில் (2.7%) 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

46

சாப்மில்லர் (SABMiller) நிறுவனம் உலகின் முதல் 5 பீர் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 150க்கும் மேற்பட்ட பீர்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் நாட்டில் அதிகம் விற்பனையாகும், அதிக கிக் கொடுக்கும் நாக் அவுட் (Knock Out) பிராண்ட் பீரை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. குத்துச்சண்டை வீரரைப் போல போஸ் கொடுக்கும் இந்த பீர் அதிகம் விற்பனையாகும் (8.7%) பிராண்டுகளில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

56

சாப்மில்லர் நிறுவனத்தின் மற்றொரு பிராண்ட் நாட்டில் மிக குறைந்த விலைக்கு விற்கப்படும் ஹேவார்ட்ஸ் (Heywards) 'ஏழைகளின் மது' என்று அழைக்கப்படுகிறது. ஹேவார்ட்ஸ் பிராண்டின் பீர் அதிகம் விற்பனையாகும் பீர்களில் 2வது இடத்தை (15%) பிடித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் இது அதிகம் விற்பனையாகும் மது பிராண்டாகும். இதை உள்ளூர் பிராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

66

கிங்பிஷர் (kingfisher) என்பது இந்தியாவின் யுனைடெட் பிரூவரிஸ் குழுமத்தின் பெங்களூரை தளமாகக் கொண்ட பீர் ஆகும். இந்த பிராண்ட் முதலில் 1857ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கிங்பிஷர் பிராண்டின் பீர் நாட்டிலேயே அதிகம் (41%) விற்பனையாகும் பீர். ஆர்சிபி முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவின் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories