சாப்மில்லர் (SABMiller) நிறுவனம் உலகின் முதல் 5 பீர் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 150க்கும் மேற்பட்ட பீர்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் நாட்டில் அதிகம் விற்பனையாகும், அதிக கிக் கொடுக்கும் நாக் அவுட் (Knock Out) பிராண்ட் பீரை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. குத்துச்சண்டை வீரரைப் போல போஸ் கொடுக்கும் இந்த பீர் அதிகம் விற்பனையாகும் (8.7%) பிராண்டுகளில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.