வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும். அதே போல பணவரவையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் இந்த கல் உப்பையும் வீட்டு வாசலில் வைப்பார்கள். முதலில் இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுமையாக கல் உப்பை நிரப்பி தட்டி வையுங்கள். வீட்டு வாசலில் திருஷ்டிக்காக இதை வைக்க வேண்டும். வீட்டு வாசலில் பொதுவாக ஒரு ஓரமாக ஒரு கிண்ணத்தில் உப்பு நிறைய போட்டு வைத்தால் கண் திருஷ்டிகள் எதுவும் உள்ளே நுழையாது என்று கூறுவார்கள்.