
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் அழகை பராமரிக்க வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாத்ரூமை எவ்வளவு அழகாக வைக்கம் முயற்சி செய்தாலும் அதற்கான பலன் சரியாக கிடைப்பதில்லை. அதாவது, குளியலறை குறித்த சுத்தம் குறித்து நாம் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை துர்நாற்றம் தான். ஆம், பாத்ரூமை நாம் எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வருவதை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாமல் போகிறது. பாத்ரூமில் இருந்து வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சந்தைகளில் பலவிதமான வாசனைப் பொருட்கள் விற்றாலும் அவை நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாத்ரூமில் வரும் துர்நாற்றத்தை சுலபமாக தடுத்து, பாத்ரூம் முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள்:
பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணங்களில் முதலில் இருப்பது டாய்லெட் மற்றும் ஷவர் ஒரே அறையில் அருகருக இருப்பது தான். மற்றொரு காரணம் என்னவென்றால் குளியலறை தொட்டி தான். ஆம், சில சமயங்களில் குளியலறை தொட்டியில் கறை அல்லது பாசி படிந்து இருந்தால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மேலும் சில நேரங்களில் டாய்லெட்டில் ஈரம் காயாமல் இருந்தால் கூட துர்நாற்றம் ஏற்படும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பாத்ரூம் வாசனையாக இருக்கனுமா? இந்த '7' டிப்ஸ்ல ஒன்னு போதும்!!
பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவது தடுக்க டிப்ஸ்:
கிருமி நாசினி:
பாத்ரூமில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க கிருமி நாசினி கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பாத்ரூமை துடைக்கவும் அல்லது தெளிக்கவும். இப்படி செய்தால் பாத்ரூமில் துர்நாற்றம் அடிக்காது.
இயற்கை வாசனை பொருட்கள்:
சந்தையில் விற்கப்படும் சில இயற்கையான வாசனை வீசும் பொருட்களை டாய்லெட்டில் வாங்கி வையுங்கள். இதனால் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கி வாசனை அடிக்கும். அதுமட்டுமின்றி டாய்லெட் ரோல், பிளேஸ் உபயோகப்படுத்துவதன் மூலமும் பாத்ரூமில் இருந்து துர்நாற்றத்தை சுலபமாக ஆகற்றிவிடலாம்.
இதையும் படிங்க: பேக்கிங் சோடா இருந்தா போதும்... பாத்ரூம் வாளி, கப்பில் உள்ள மஞ்சள் கறை நீங்க சூப்பர் டிப்ஸ்!!
வினிகர் & எலுமிச்சை:
பாத்ரூமில் துர்நாற்றம் வீசினால் சில துளிகள் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து பாத்ரூமில் தெளிக்க வேண்டும் அதுபோல பாத்ரூமின் சுவற்றில் ஈரம் இருந்தால் அவற்றை உடனே சரி செய்யவும். ஏனெனில் ஈரமான சுவற்றால் கூட பாத்ரூமில் துர்நாற்றம் அடிக்கும்.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா கெட்ட வாசனை அகற்ற பயனுள்ளதாகும். எனவே இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி அதை பாத்ரூம் முழுவதும் தெளித்தால் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கிவிடும் வேண்டுமானால் இதனுடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கிராம்பு:
கிராம்பு வலுவான வாசனை உள்ளதால் சில கிராமத்துண்டுகளை பாத்ரூமில் வைக்கலாம். இதனால் பாத்ரூம் முழுவதும் துர்நாற்றம் நீங்கி வாசனை வீச ஆரம்பிக்கும்.
முக்கி குறிப்பு :
- பாத்ரூமில் காற்றோட்டம் இருப்பது மிகவும் அவசியம். மேலும் புதிய காற்று உள்ளே வந்து துர்நாற்றம் நிறைந்த காற்று வெளியே போகும் படி வழி இல்லையென்றால் கண்டிப்பாக பாத்ரூமில் துர்நாற்றம் வீசும். பாத்ரூமில் காற்றோட்டம் இருப்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அதுபோல குளியலறையில் பயன்படுத்தும் தண்ணீர் சரியாக வடிகாலுக்கு செல்கிறது என்பதே உறுதிப்படுத்தவும். ஒருவேளை கழிவு நீர் தேங்கி இருந்தால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி அதன் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அவ்வப்போது வாய்க்காலை சுத்தம் செய்யுங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.
- வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பாத்ரூமை சுத்தம் செய்வது மிகவும் அவசியம் இதனால் உங்கள் வீட்டு பாத்ரூம் துர்நாற்றம் இல்லாமல் தூய்மையாக இருக்கும்.