பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பரை அடிக்கடி மாற்றுபவரா? இனி இந்த டிப்ஸ் தெரிந்தால் 1 வருடமானாலும் தூக்கி போட மாடீங்க

First Published Jul 25, 2022, 6:07 AM IST

Steel scrubber: பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் துருப்பிடிக்காமல், அறுபடாமல் இருக்க  இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்..

Steel scrubber:

வீட்டில் சமைத்த பாத்திரங்களை தேய்க்க, இன்றைய பெரும்பாலான வீடுகளில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நாம் அவசர அவசரமாக பாத்திரம் கழுவும் போது, ஸ்டீல் ஸ்க்ரப்பரில் இருக்கும்  சின்ன சின்ன துகள்கள் பாத்திரத்தின் இடுக்கில் மாட்டி அறுபட்டு பாத்திரத்தோடு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்திய ஒரு சில நாட்களிலேயே துருப்பிடிக்க தொடங்கும். அதனால், அதனை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்த துவங்குவோம்.

மேலும் படிக்க....தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

Steel scrubber:

எனவே, நீங்கள் பயன்படுத்தும்  ஸ்க்ரப்பர் நீண்ட நாள் உழைக்க வேண்டும், என்றால் ஸ்டீல் ஸ்க்ரப்பரை வாங்கியவுடன் முதலில் இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க, அப்படி செய்தால் இனி 1 வருடமானாலும் பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் துருப்பிடிக்கவே பிடிக்காது. 

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்
 

Steel scrubber:

1. முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து   ஸ்டீல் ஸ்க்ரப்பர் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது, நீங்கள் புதியதாக வாங்கிய 3அல்லது நான்கு ஸ்டீல் ஸ்க்ரப்பரை இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள்.ஒரு ஸ்கிரப்பர் இருந்தால் கூட இதில் போட்டுக் கொள்ளலாம். 

2. பிறகு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு தலையில் தேய்த்து குளிக்கும் 1 டீஸ்புன் ஷாம்பூ அல்லது பாத்திரம் தேய்க்கும் லிக்விடை இந்த தண்ணீரில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். ஸ்டீல் ஸ்க்ரப்பர் அந்த தண்ணீரிலேயே அப்படியே 5 நிமிடம் இருக்கட்டும்.

Steel scrubber:

3. ஆறிய பின்பு சுடு தண்ணீரில் இருக்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பரை எடுத்துப் பார்த்தால் ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இறுக்கமாக நமக்கு கிடைத்திருக்கும். அந்த ஸ்டீல் ஸ்க்ரப்பர் கையில் தொடும்போதே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். 

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

4. இப்போது இந்த ஸ்க்ரப்பரை பாத்திரம் தேய்க்க பயன்படுத்துங்கள். வாங்கிய உடனே ஸ்டீல் ஸ்க்ரப்பரை பயன்படுத்துவதை, விட இப்படி சுடு தண்ணீரில் போட்டு பாத்திரம் கழுவ பயன்படுத்தி பாருங்கள் நிறையவே வித்தியாசம் தெரியும். நீண்ட நாள் ஸ்டீல் ஸ்க்ரப்பர் துருப்பிடிக்காமல் அறுபடாமல் உழைக்கும்.

click me!