இத நீங்கள் ஏழு நாளைக்கு செய்யுங்க; உங்க வீட்ல பண மழைதான்!!

Published : Oct 04, 2024, 01:20 PM IST

நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிய வேண்டுமா? பண மழை உங்கள் வீட்டில் கொட்ட வேண்டுமா? அப்படின்னா தொடர்ந்து ஏழு நாளைக்கு இத மட்டும் செய்யுங்க. 

PREV
19
இத நீங்கள் ஏழு நாளைக்கு செய்யுங்க; உங்க வீட்ல பண மழைதான்!!
இத நீங்கள் ஏழு நாளைக்கு செய்யுங்க; உங்க வீட்ல பண மழைதான்!!

பணக்காரர் ஆக கடின உழைப்புடன், வாஸ்து விதிகளையும் பின்பற்றுவது அவசியம். நிறைய பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் நேர்மறை ஆற்றல் இருப்பது கண்ணுக்கு தெரியா விட்டாலும் அதுதான் காரணமாகவும் இருக்கலாம். 

29
வீட்டை சுத்தம் செய்தல்

பணம் சம்பாதிக்க, காலையில் எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தூய்மை மிக முக்கியம். வீடு சுத்தமாக இல்லாமல் இருக்கக்கூடாது. குப்பைகளை ஆங்காங்கே சேர்த்து வைக்கக் கூடாது. பெருக்கியவுடன் எடுத்து விட வேண்டும்.

39
துர்நாற்றம்

வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தால் அந்த வீட்டில் லட்சுமி தங்குவதில்லை. எனவே வீட்டில் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். சந்தையில் தற்போது ஏராளமான பூஜை பொருட்கள் நறுமணத்துடன் வந்துள்ளன.

49
அழுக்கு துணி

அழுக்குத் துணிகளை வீட்டில் குவித்து வைக்காதீர்கள். இந்தப் பழக்கம் வாஸ்துவுக்கு மிகவும் மோசமானது. அழுக்குத் துணிகளை அவ்வப்போது த துவைத்து விடுங்கள். 

59
வீட்டில் பொருட்கள்

வீட்டில் எங்கும் பொருட்களைச் சிதற விடாதீர்கள், இது வேலைகளில் தாமதத்தை ஏற்படுத்தும். மேலும் வீடு முழுவதும் பொருட்களை சேர்க்கக் கூடாது. வீட்டில் ஆங்காங்கே காற்று செல்வதற்கு ஏதுவாக இடைவெளி விட்டு பொருட்களை வைக்க வேண்டும். சிலர் ஒரே இடத்தில் மொத்தப் பொருட்களையும் வைத்து இருப்பார்கள். இப்படி செய்யக் கூடாது. சுவற்றை ஒட்டி சிறிது இடம் விட வேண்டும்.

69
முன் வாசல்

முன் வாசலை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இது லட்சுமி வருகைக்கு வழிவகுக்கும். எந்த வேலைக்கும் வெற்றி கிடைக்கும். பொதுவாக முன் வாசக் காலில் குல தெய்வம் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, உள்ளே வரும்போது குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.

79
தியானம்

மிக முக்கியமானது தியானம். நாளின் எந்த நேரத்திலும் கண்களை மூடிக்கொண்டு உங்கள் வெற்றியை காட்சிப்படுத்தி பாருங்கள். இது இலக்கை அடைய உதவும். கனவு கண்டால் ஒரு நாளில் கைகூடும் என்று கூறப்படுவது உண்டு. அதுதான் இது.

89
வெளியே செல்ல வேண்டுமா

அவசரமாக வெளியே செல்வதற்கு முன், வீட்டை சுத்தம் செய்து விட்டுச் செல்லுங்கள். சுத்தமில்லாத வீட்டில் இருந்து வெளியே செல்லக் கூடாது. 

99
சமையலறை

வீட்டின் சமையலறைதான் பணம் வரக்கூடிய மிக முக்கியமான இடம். ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையின் சுத்தம் தான் வீட்டின் வளத்தை நிர்ணயிக்க்கும். எனவே, சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை குவித்து வைக்காதீர்கள். அவ்வப்போது கழுவி எடுக்கவும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories