தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே சேரும், தண்ணீரில் தேங்கிருக்கும். இதனால் காலணிகள் ஷூக்கள் பெரும்பாலும் அழுக்காகி விடும். அதிலும் குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் வெள்ளை ஷூக்கள் ரொம்பவே அழுக்காகி விடும். எனவே, அதை அடிக்கடி சுத்தம் செய்வது சாத்தியமில்லை. அதுவும் தண்ணீரால் சுத்தம் செய்வது ரொம்பவே கஷ்டம். ஏனெனில் மழைகாலம் என்பதால் வெயில் அவ்வளவாக இருக்காது. இதனால் சுவை தண்ணீரில் அலசி காய வைக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையின் வெள்ளை ஷூ அழுக்காக இருந்தால் அதை கஷ்டம் இல்லாமல் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
baking soda clean shoes in tamil
பேக்கிங் சோடா:
அழுக்காக இருக்கும் வெள்ளை ஷூவை கழுவ பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு பிரஷ் கொண்டு இந்த கலவையை அழுக்கான ஷூ மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்கவும். பின் ஈரமான துணியால் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் வெள்ளை சுவில் இருக்கும் அழுக்கை முற்றிலும் நீங்கிவிடும்.
35
tooth paste clean shoes in tamil
டூத் பேஸ்ட்:
தண்ணீர் இல்லாமல் மழை காலத்தில் உங்கள் குழந்தையின் அழுக்காக இருக்கும் வெள்ளை ஷூவை சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட் சிறந்த தேர்வாகும். இதற்கு டூத் பேஸ்ட்டை குழந்தையின் ஷூ மீது தடவி சிறிது நேரம் கழித்து ஒரு பிரஷ் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். பிறகு ஈரமான துணி கொண்டு துடைக்க வேண்டும். இப்படி செய்தால் வெள்ளை ஷூவில் இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும்.
வெள்ளை ஷூவில் இருக்கும் அழுக்கை போக்க பாத்திரம் கழுவும் லிக்விட் பயன்படுத்தலாம். இதற்கு சூடான நீரில் ஒரு ஸ்பூன் பாத்திரம் கழுவும் லிக்வடை சேர்த்து நன்றாக கலந்து ஒரு துணியை அதில் நனைத்து பிறகு அதை கொண்டு அழுக்கான வெள்ளை ஷூவில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் ஷூவில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். பிறகு உலர்ந்த துணியால் ஷூவை துடைக்க வேண்டும்.
வெள்ளை ஷூவில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய சோப்பு நீர் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோப்பு போட்டு நன்றாக கலக்கவும். பிறகு ஒரு துணியை இந்த தண்ணீரில் நனைத்து அதை கொண்டு அழுக்கான ஷூவில் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். இப்போது பார்த்தால் வெள்ளை ஷூ வெண்மையாக இருக்கும்.