தற்போது எல்லோருடைய வீட்டிலும் தண்ணீர் தொட்டி இருக்கிறது. என்னதான் தண்ணீர் தொட்டி இருந்தாலும் அந்த தொட்டியை அவ்வப்போது சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் தண்ணீர் தொட்டி சுத்தமாக இல்லாவிட்டால், அதில் பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகள் உருவாகும். மேலும் அந்த நீரை பயன்படுத்தும் போது அதனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நோய்கள் தான் வரும்.
24
Water Tank Cleaning tips in tamil
ஆனால், சிலர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு சிரமப்படுகிறார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. நிபுணர்களின் கூற்றுப்படி, தண்ணீர் தொட்டியை 3 அல்லது 6 மாதவிலக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில், நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை கழுவுவதற்கு சிரமப்படுகிறீர்கள் என்றால் அதை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.
வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்யவதற்கு முன் முதலில் அதில் இருக்கும் தண்ணீரை அனைத்தையும் வெளியேற்றவும். பிறகு அதில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுமார் 2-3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ப்ளீச்சிங் பவுடர் தொட்டியில் இருக்கும் பாக்டீரியாக்கள், பாசிகளை அகற்ற உதவுகிறது. அதன்பிறகு தண்ணீரைக் கொண்டு தொட்டியை நன்கு கழுவி விடுங்கள்.
தண்ணீர் தொட்டியில் தூசி மற்றும் பூச்சிகள் நுழையாதவாறு அதை எப்போதும் மூடியே வைக்க வேண்டும். இது தவிர அவ்வப்போது நீர் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு : தண்ணீர் தொட்டியை கழுவும் போது கையில் கையுறை மற்றும் முகமூடி அணிய மறக்காதீர்கள்.