இன்றைய காலத்தில், மேற்கத்திய உணவு கலாச்சாரம் நம்மில் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், சத்து நிறைந்த உணவு வகைகளை நாம் மறந்து வருகிறோம். அதுமட்டுமின்று, நேரம், காலம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லாத உணவு, நேரம் தவறிய உணவு முறையாலும் நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நேரம், காலம், அமரும் முறை போன்றவற்றை முறையாக கடைபிடிப்பவர்கள். அதனால், தான் அவர்களின் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தது.