பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு பொருள்களை நீண்ட நேரம் பிரிட்ஜின் மேல் குவித்து வைக்க வேண்டாம். ஏனெனில், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தால் பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகும் நிலை ஏற்படும்.
முக்கியமாக, வீட்டை சுத்தம் செய்ய பயன்படும் லிக்விட், பிளீச்சிங் பவுடர், சானிடைசர் (Sanitizer) மற்றும் பினாயில் (Phenyl) போன்ற கெமிக்கல் பொருட்களை பிரிட்ஜிக்கு மேல் வைத்தால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், மின்னணு சாதனங்கள், காகிதங்கள், எண்ணெய் பாட்டில்கள், அதிக எடை கொண்ட பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டிஷ்யூ பேப்பர்கள், தீப்பெட்டி ஆகியவற்றையும் பிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாது.
பிரிட்ஜின் கம்ப்ரஸர் அதிக நேரம் வேலை செய்யும்போது அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கும். அந்த நேரத்தில் பிரிட்ஜ் மேல் இருக்கும் காகிதம் மிக எளிதாக தீப்பற்ற தீ விபத்தை உண்டாக்கலாம்.