Monthly Horoscope:
ஜோதிடத்தின் படி, பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலைப்படி சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க....Guru Peyarchi: குருவின் வக்ர பெயர்ச்சியால்...இன்னும் இரண்டு நாட்களில் குபேரனின் பண மழையில் நனையும் ராசிகள்...
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். இந்த கிரகங்களின் நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். எனவே, இந்த ஆகஸ்ட் மாத அதிர்ஷ்டகார ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Monthly Horoscope:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் மூலம் வருமானத்தைப் பெறலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். பல வழிகளிலிருந்து பண வரவு இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டாகும்.