டிண்டர், பம்பிள், கிரிண்டர்- காதலை கண்டறிவதற்கு கொட்டிக்கிடக்கும் டேட்டிங் செயலிகள்..!!

First Published | Sep 17, 2022, 12:05 AM IST

நிகழ்காலத்தில் மாறிவரும் பண்பாட்டு வழக்கத்துக்கு தொழில்நுட்பம் பெரும் உந்துசக்தியாக உள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் தற்கால இளைய தலைமுறையினர் காதலையும் கண்டைகின்றனர். அதற்கு பல்வேறு டேட்டிங் செயலிகள் துணையாக உள்ளன. உங்களுடைய மொபைல் போன் மற்றும் அதனுடைய தொழில்நுட்ப கட்டமைப்புக்கு ஏற்ப பல்வேறு வகையான டேட்டிங் செயலிகள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கின்றன. ஒருவரை நேரடியாக பார்க்காமல், செயலி மூலம் நட்பு கொண்டு, பிடித்திருந்தால் காதல் கொள்ளலாம். டேட்டிங் செயலியில் கணக்கு துவங்க வயது தடையில்லை. ஆனால் நீங்கள் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது மட்டும் கட்டாயமாகவுள்ளது. தற்போதைய சூழலில் மக்களிடையே பிரபலமாக இருக்கும் டேட்டிங் செயலிகளை குறித்தும், அதனுடைய தனித்துவம் கொண்ட தொழில்நுட்ப மேம்பாடுகளை பற்றியும் விரிவாக் பார்க்கலாம்.

ஹின்ஞ் (Hinge)

இந்த செயலி தனது வாசகத்தில், உங்களுடைய வாழ்நாள் துணையை ஹின்ஞ்சில் தேர்வு செய்யலாம் என்கிற வாக்கியத்தை குறிப்பிட்டுள்ளது. அதனால் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்க்கை துணையை பெறும் நோக்குடன் ஹின்ஞ் செயலியில் கணக்கு துவங்குகின்றனர். ஒருவர் கணக்கு துவங்கும் போது பாலின்ம், வயது, மதம், உங்களுடைய பண்பு, 6 புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இச்செயலிக்கு தரவேண்டும். அதை தொடர்ந்து உங்களுடைய பண்பின் அடிப்படையில், சிலருடைய முகவுரைகளை ஹின்ஞ் செயலி வழங்கும். சில ஐஸ்பிரேக்கர் கேள்விகளைக் கேட்கவும், ஒரு தனித்துவத்தை உருவாக்குவதற்கான தூண்டுதல்களை எழுதவும் அனுமதிக்கிறது. ஹின்ஞ் மூலம் நீண்ட கால உறவுகளை கண்டறிந்தவர்களிடம் நல்ல விமர்சனங்களை இச்செயலி பெற்றுள்ளது.
 

பம்பிள் (Bumble)

டேட்டிங் தொடர்பான நடவடிக்கைகளில் ஆண்களை விடவும் பெண்கள் தான் அதிகளவில் தேவையற்ற தொடர்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதுசார்ந்த பிரச்னைக்கு பம்பிள் செயலி சிறந்த தீர்வை வழங்குகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலறும் இந்த செயலியில் இருக்கின்றனர். எனினும் தங்களுடைய விருப்பமான நபரை தேர்வு செய்வதற்கான முதல் நகர்வை பம்பிள் செயலி பெண்களுக்கு மட்டுமே வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இதனுடைய இலவச பதிப்பு கிடைக்கிறது. ஆனால் இதனுடைய குறிப்பிட்ட வசதிகளை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

ஹெர் (Her)

LGBTQIA+மக்கள், தங்களுடைய டேட்டிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரத்யேக செயலியாக உள்ளது ஹெர். இதனால் ஆண்கள், பெண்கள் இருபாலரும் ஹெர் செயலியில். உள்ளூர் சந்திப்புகளில் பங்கேற்க உதவும் இந்த செயலி, பண்பாட்டு மீதான ஈடுபாட்டையும் அதிகரிக்கிறது. இந்த செயலி மூலம் பா பெண்கள் தங்களுடைய காதலிகளையும் வாழ்க்கைத் துணையையும் கண்டறிந்துள்ளதாக கருத்துப் பதிவு செய்துள்ளனர்.
 

கிரிண்டர் (Grindr)

ஹெர் செயலியைப் போலவே கிரிண்டரும் LGBTQIA+ மக்களுக்கு என்று தனிப்பட்ட வகையில் இயங்கும் செயலி தான். எனினும் தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண்களிடையே இது பிரபலமாக உள்ளது. கிரிண்டர் செயலி, LGBT சமூகம் ஆபத்தில் இருக்கும் நாடுகளிலுள்ள பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அவ்வப்போது மாறி வரும் நடைமுறைகளுக்கு ஏற்ப, தனது பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை செயலியின் வடிவின் முன்னெடுத்து வருகிறது.  
 

டிண்டர் (Tinder)

டிண்டர் என்று சொன்னவுடன் வெட்டியாக பொழுதைக் கழிப்பது தான் நம்மில் பலருக்கும் நினைவு வரும். வெறும் நேரத்தை கடத்துவதற்காக ஒருவரை தெடுகிறீர்கள் என்றால், நீங்கள் தாரளமாக டிண்டரில் கணக்கு தொடங்கலாம். எதையாவது மனத்தில் வைத்துக்கொண்டு, நேர்மறையாக எதுவும் பேசவேண்டாம். இந்த செயலியில் முடிந்தவரை நீங்கள் நேர்மையாக இருக்கலாம். உங்களுக்கு சாத்தியமான பொருத்தங்களை கண்டறிவதன் மூலம், தொடர்ந்து உங்களுக்கான பொருத்தங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். டிண்டரில் உங்களுடைய முகத்தைப் பார்த்து தான் மக்கள் வருவார்கள். அதனால் எப்போதும் தங்களது புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம். எப்போது செயலியை திறந்தாலும் முதல் 100 ஸ்வைப்கள் இலவசம். சாதாரண சந்திப்புகளுக்கு டிண்டர் எப்போதும் சிறந்த செயலியாகும்.

லெக்ஸ் (Lex)

சமூகவலைதளத்தில் கிடைக்கும் இலவசமான டேட்டிங் செயலி தான் லெக்ஸ். இது கியூர் மக்களுக்கான பிரத்யேக செயலியாக இயங்கி வருகிறது. டேட்டிங் செய்வதற்கும் புதியதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும், சாதாரன மக்களுடன் இணைந்து நட்பு வளர்க்கவும் லெக்ஸ் செயலி உதவுகிறது.
 

காபி மீட்ஸ் பேகில்

காபி மீட்ஸ் பேகல் என்பது தீவிரமான மற்றும் நீண்ட கால உறவுகளைக் கண்டறியும் மற்றொரு செயலியாகும். இந்த செயலியில் கணக்கு துவங்கிவிட்டால், நீங்கள் பொருத்தமான நபரை ஸ்வைப் செய்யவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஸ்வைப் செய்யாமலேயே நீங்கள் சாத்தியமான பொருத்தங்களை கண்டறிய முடியும். 
 

Latest Videos

click me!