நம் எல்லோருடைய வீடுகளிலும் சமையலில் அவ்வப்போது பயன்படுத்தப்படும் பழ வகைகளில் ஒன்று எலுமிச்சை பழங்கள். இது தோல், முடி மற்றும் நம் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இதன் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்
அப்படி, இந்த எலுமிச்சை பழத்தை நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தியிருக்கலாம், அவற்றின் தோலை நீங்கள் பயன்படுத்தியது உண்டா..? எனவே, நீங்கள் எலுமிச்சம் பழத்தோல்களை எப்படிப் பயன்படுத்தலாம் மற்றும் அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போம்.