ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வேலை , வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை மற்றும் வணிகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. புதன் ஒரு தீய கிரகத்துடன் இணைந்தால், அது சாதகமற்ற விளைவுகளை உருவாக்குகிறது, சுப கிரகங்களுடன் இணைந்தால் சாதகமான விளைவுகளை உருவாக்குகிறது.
மிதுனம்:
புதனின் பெயர்ச்சி உங்களுக்கு ஐந்தாம் வீட்டில் நடக்கப் போகிறது. இது உங்களுக்கு சாதகமாக பலன்களை தரும். எனவே, இந்த நேரத்தில் குழந்தைகளின் பக்கத்திலிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். உங்களுக்கு இந்த நேரத்தில், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் வேலை தொடர்பான விஷயங்களிலும் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம்.
துலாம்:
உங்கள் ராசியை புதன் ஆட்சி செய்வதால், புதனின் பெயர்ச்சி, உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும்.
கடகம்:
உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதனால், புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும். தாயின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பல நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.