Mosquito: மழைக்காலத்தில் கொசுக்களை விரட்ட இப்படி ஒரு வழி இருக்கா..? அடடே..! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே..!

First Published Oct 25, 2022, 10:54 AM IST

Kosukalai viratta minsara thailam in Tamil: இயற்கையான முறையில் கொசுவை விரட்ட நம் வீட்டில் இருந்தபடியே ஒரு லிக்விடை தயாரிப்பது எப்படி என்பதை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

மழைக்காலம் வந்து விட்டாலே கூடவே, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வந்து நமக்கு தொல்லை கொடுக்கும். கூடவே கொசு தொல்லை ஆரம்பிக்கும். இதனால் நமக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற உடலில் பல்வேறு நோய் தொற்றுகள் தோற்றும்.

பகலில் வேலை எல்லாம் முடித்துவிட்டு இரவில் உறங்க சென்றால்  நிம்மதியான தூக்கம் இருக்காது.  எனவே நாம் கொசுவை விரட்டுவதற்கு பொதுவாக வேப்ப எண்ணெய், கற்பூரம், வேப்ப இலை, உள்ளிட்ட சில பொருட்களை நாம் பயன்படுத்துவோம். அப்படி இல்லை என்றால், கடைகளில் விற்கும் ஆல் அவுட், குட் நைட் போன்ற கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். இதனால் உங்களின் பணமும் செலவு ஆகும். ஆரோக்கிய குறைபாடும் ஏற்படும். குறிப்பாக சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொசுவத்தியை பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப ஆபத்தானது.

மேலும் படிக்க...Banana: ஒரு வாரம் கழித்து கூட வாழைப்பழம் அழுகாமல் இருக்க..இந்த சூப்பர் டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

எனவே, நம் இயற்கையான முறையில் கொசுவை விரட்ட நம் வீட்டில் இருந்தபடியே ஒரு லிக்விடை தயாரிப்பது எப்படி என்பதை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

புதினா எண்ணெய் மற்றும் புதினா சாறு அவற்றின் நறுமணத்தால் சிறந்த பூச்சி விரட்டியாக இருக்கிறது. கொசு அதிகம் கடிக்கும் இடத்தில் இந்த எண்ணெயை தடவுங்கள்.

வேம்பு அதன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்காக வீட்டில் இருக்கும் கொசு விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. 

உங்கள் உடலில் கொசு அதிகம் கடிக்கும் இடங்களில் வேப்பெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தேய்க்கவும். இது சருமத்தால் உறிஞ்சப்பட சிறிது நேரம் எடுக்கும் ஆனால் கொசுவை விரட்ட இது ஒரு நல்ல முறையாகும்.
 

பூண்டு அதன் கடுமையான வாசனை காரணமாக மிகவும் திறமையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. ஒரு பூண்டை நசுக்கி அதனை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பச்சை கற்பூரத்தை நன்றாக நசுக்கி போட்டு கலந்து விட்டால், பச்சை கற்பூரம் சேர்த்து, சேர்த்த பிறகு நல்ல நுரை வரும் அளவுக்கு மிக்ஸ் பண்ணி விட்டுடுங்க.

மிக்ஸ் பண்ண பிறகு அதில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க...Banana: ஒரு வாரம் கழித்து கூட வாழைப்பழம் அழுகாமல் இருக்க..இந்த சூப்பர் டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

பயன்படுத்தும் முறை:

ஒரு அகல் விளக்கில் இந்த எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டால், இதில் வரும் புகை கொசுவை விரட்டி அடித்து விடும். 

மற்றொரு வழிமுறையாக, இந்த எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக சூடு செய்யும்போது புகை வெளியேறும் அந்த புகைக்கும் கொசு வீட்டிற்குள் வராது.

click me!