பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் படி, இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். அதன்படி, இன்று அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதி/பிரிவு சூரிய கிரகணமாக இருக்கும். இன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.. இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும்.இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டில் மாலை 5.14 மணிக்கு காணலாம் என அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பகுதியளவு சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும். தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. .இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது.
இருப்பினும், இந்த கிரகண நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.
solar eclipse 2022
கிரகணம் சமயத்தில் செய்யக்கூடாதவை:
கிரகண சமயத்தில் , கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
அதேபோன்று, தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது, உணவு உண்ணவோ கூடாது. இதனால் கிரக நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. அதேபோன்று, கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடனேயே தர்ப்பையை வைத்திருப்பது அவசியம்.