வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களையும் விட மிக குறைவான வேகத்தில் பயணித்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகிறார். இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது.
தற்போது, சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் உள்ளார். அக்டோபர் 23, 2022 முதல் இவரது நிலை மாறவுள்ளது. சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.