Guru peyarchi 2022 Panagal:
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மற்றும் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான், வரும் நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார்.
Guru peyarchi 2022 Panagal:
ரிஷபம்:
குருவின் சஞ்சாரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றியைத் தரும். குரு பெயர்ச்சி காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திடீரென்று பண வரவு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உருவாகும்.
Guru peyarchi 2022 Panagal:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். புதிய வேலையைத் தொடங்கலாம். லாபமும் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் இருக்கும்.