ஏனெனில், பெரும்பாலானோரின் திருமண வாழ்கையில் வேறொரு உறவில் இருப்பதற்கு உங்களின் பிரச்சனைகள் தூண்டு கோலாக இருக்கிறது. ஆண்களுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை திருப்தியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கிறார்கள். சில நேரம் இவை இல்லாத போது, வேறொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, கள்ள உறவு ஏற்படுகிறது. கள்ள உறவு தம்பதிகளின் திருமண உறவை சீர்குலைக்கும்.
பிறருருடன் தொடர்பில் இருப்பது உங்கள் கணவருக்கு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த செயலால் உங்களால் ஏமாற்றப்படும் நபருக்கு, உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும். ஒரு ஆண் தனது துணையை ஏமாற்றுவதற்கு முன் முயற்சி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உறவை புதுப்பித்து கொள்ளுங்கள்:
உங்கள் உறவு மிகவும் சலிப்பாக இருந்தால், நீங்கள் வேறொருவரைத் தேடுவதற்கு முன்பாக, செக்ஸ் வாழ்க்கையை மசாலாப் படுத்த, நீங்கள் வெவ்வேறு நிலைகளை முயற்சி செய்ய வேண்டும். காதல் சர்ப்ரைஸ் மற்றும் டேட்டிங்கைச் சேர்த்து, அது முன்பு போல் உற்சாகமாக இருக்கிறதா என்பதைப் சிந்தித்து பார்க்கவும்.
செக்ஸ் பொம்மைகள்:
செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தியும் தம்பதிகள் இருவரும் முயற்சி செய்யலாம். ஏனென்றால் இந்தியாவில் இப்போது நிறைய கிடைக்கிறது. இது உங்கள் துணையும் நீங்களும் உங்கள் பாலியல் வாழ்க்கையை பற்றி பேசி, இணைந்து மகிழ்ச்சயாக செயல்பட வேண்டும். ஆண்கள் கள்ள உறவில் அடையும் புணர்ச்சியை விட, இது ஆண்களுக்கு உச்சபட்ச இன்பத்தை அளிக்கிறது. இந்த இன்பத்தை அனுபவிக்க ஆண்கள் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஒன்றாக செயல்படுங்கள்:
ஒரு நல்ல துணையாக இருப்பதற்கு, திருமண உறவில் நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அதில் செயல்பாடுகள் மற்றும் வேலைகளை ஒன்றாகச் செய்வது முக்கியம். குறிப்பாக, கணவன் -மனைவி உங்களுடைய வாழ்க்கை துணைக்காக நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும். அவருக்கு பிடித்த இடத்திற்கு கூட்டி சென்று போக வேண்டும். பிடித்த பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.