Suriyan Peyarchi:
சூரியனின் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16-ம் தேதி ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இரவு 11.11 மணிக்கு பெயர்ச்சியாகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும். அப்படியாக, சூரியனின் இந்த ராசி மாற்றம் மிதுனம், கடகம், துலாம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்னும் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க.....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றம்...ஆகஸ்ட் 7 வரை படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...
Suriyan Peyarchi:
ரிஷபம்:
கடகத்தில் சூரியன் பெயர்ச்சி நிகழ்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் சாத்தியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலம். அதாவது, அவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதில் வெற்றி பெறலாம்.