Sukran Peyarchi: சுக்கிரன், சூரியன் கூட்டணி..செப்டம்பர் 15 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், உஷார் தேவை

First Published | Aug 30, 2022, 8:03 AM IST

Sun and Venus Transit 2022: Sukran Peyarchi 2022: சூரியன், சுக்கிரன் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Sun and Venus Transit

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரியன் சிம்ம ராசியை ஆளும் கிரகம் ஆகும். சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கிறார். இதையடுத்து, சுக்கிரனும் 2022 ஆகஸ்ட் 31 அன்று அதாவது நாளை சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். இது சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையை ஏற்படுத்தும். இதையடுத்து, சுக்கிரன் சிம்மத்தில் 23 நாட்கள் தங்குவார். சூரியன் சிம்மத்தில் செப்டம்பர் 15 வரையிலும் இருக்க போகிறார்.

மேலும் படிக்க..Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

Sun transit

இந்த வகையில், ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 15 வரை சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பிரச்சனை ஆரம்பமாகும்..அப்படியாக, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Sun and Venus Transit

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன் இணைவதால் செலவுகள் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும்,  ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கலாம். வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

Sun and Venus Transit

கன்னி: 

கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த காலத்தில் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். உறவுகள் மோசமடையக் கூடும். தேவையற்ற விஷயங்களை மிகவும் கவனமாகக் கையாளுங்கள். காதல் வாழ்க்கையிலும் குழப்பங்கள் ஏற்படலாம்.

மேலும் படிக்க..Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

Sun and Venus Transit

மகரம்: 

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல துறைகளில் சவால்களை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்காது. எதிலும், பொறுமையாக இருங்கள். சில கெட்ட செய்திகள் கவலை தரலாம். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வேலையில் சிரமங்கள் இருக்கலாம். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரச்சனைகள் வரக்கூடும்.

மேலும் படிக்க..Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

Latest Videos

click me!