குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கு எள் உருண்டை ரெசிபி..சுவையாக, சுலபமாக இப்படி செஞ்சு கொடுங்கள்..

First Published | Aug 30, 2022, 6:30 AM IST

Healthy benefits of  Ellu Urundai: பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தரும், சுவையான எள் உருண்டையை இப்படி ஒருமுறை செய்து கொடுங்கள்.

நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம்  முறுக்கு, தட்டை, சீடை, அதிரசம் போன்ற ஆரோக்கியமான திண்பண்டங்களை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பார்கள். ஆனால், இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை இதனால் பாலித்தீன் கவர்களில்  அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட  ஸ்னாக்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இதனால், சிறு வயதிலேயே தொப்பை, உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, இவற்றை எல்லாம் தவிர்த்து வெறும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் தின்பண்டம் எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

தேவையான பொருட்கள்: 

வெல்லம்  – 300 கிராம்

எள்ளு – 250 கிராம் 

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயினை  வைத்து நன்றாக சூடானதும்  எள்ளை கொட்டி பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.  

பின்னர், அடுப்பில் இருந்து எள்ளை இறக்கிவிடலாம்.  பின் அதை நன்றாக ஆற வைத்து, பாதி அளவு எள்ளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு  சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

மேலும் படிக்க...Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

Tap to resize

இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லத்தை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்ச வேண்டும்.  இதில் பாகுபதம் வரும் வரை கவனமாக பார்க்க வேண்டும். இதிலும் வெல்லத்தை இப்படி காய்ச்சும் முன் பார்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர், நீங்கள் வறுத்து வைத்துள்ள எள்ளையும் பாதி பொடித்து வைத்துள்ள எள்ளையும் ஒன்றாக கொட்டி  இரண்டு நிமிடம் நன்றாக வெல்லத்துடன்  கலக்கும் வரை கிண்டி விடுங்கள். 

பின்னர், நம் கை சூடு பொறுக்கும் அளவிற்கு வந்தவுடன் கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு உருண்டை பிடித்து விடலாம்.அவ்வளவுதான் டேஸ்டியான எள்ளுருண்டை ரெடியாகிவிட்டது.இதில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெண்களின் மாதவிடாய் பிரச்சனையையும் சரி செய்ய உதவுகிறது.

மேலும் படிக்க...Guru Peyarchi2022: குருவின் ராசி மாற்றம்..வரும் 6 ஜனவரி 2023 வரை இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்..

Latest Videos

click me!