பீதியை கிளப்பும் கேஸ் அடுப்பு சமையல்- நோய் ஏற்படும் அபாயம்..!!

First Published Dec 30, 2022, 11:27 AM IST

வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் காற்றுமாசுபாடு பிரச்னை இருக்கவே செய்கிறது. அதுவும் நம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் கேஸ் அடுப்புகளில். இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம், விவரத்தை தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதும் படியுங்கள்.
 

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் அவதி அடைந்து வருகின்றன. அதில் முதன்மையானதாக இருக்கும் நகரம் தலைநகரம் டெல்லி தான். அங்கு அடிக்கடி ஏற்படும் காற்றுமாசுபாட்டு பிரச்னையால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் வெளியில் தான் ஏற்படுகிறது என்று எண்ணிவிட வேண்டும். சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் வீட்டுக்குள்ளே நம்மை அறியாமல் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதாவது எரிவாயு அடுப்புகள் மோசமானவை, அவை மனித ஆரோக்கியத்துக்கு கெடுதலை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 
 

உலகில் பல குடும்பங்கள் எல்.பி.ஜி கேஸ் ஸ்டெவ் கொண்டு தான் சமைக்கின்றனர். அதனால் இதனுடைய முக்கியத்துவத்தை கருதி, ராக்கி மவுண்டன் இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சிக் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் அடுப்புகளில் இருந்து நுண்துகள்கள் வெளியாகி சுவாசப் பாதையை அடைப்பது தெரியவந்துள்ளது. கேஸ் அடுப்பு மட்டுமில்லாமல், மின்சார அடுப்பினாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை தொடரும்பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

எல்.பி.ஜி ஸ்டெவ்வில் இருந்து நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுகள் வெளியேறுகின்றன. இது காற்றில் கலந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதில் 90 சதவீதம் மீத்தேன் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயத்தில் பர்னரை சரிவர பராமரிக்காமலிருந்தாலும் நைட்ரஜன் ஆக்சைடின் உமிழ்வு எரிச்சலை ஏற்படுத்தும். இந்தியா முழுவதும் 40 மில்லியன் எரிவாயு அடுப்புகள் உள்ளன. இதன்மூலம் வெளியாகும் மீத்தேன் வாயு, கார்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவுக்கு சமமானது என்று சுற்றுச்சூழல் எழுத்தாளர் ராப் ஜாக்சன் குறிப்பிடுகிறார். 

உங்களுடைய வீடுகளில் இருக்கும் சமையலறைகளில் எக்ஸாஸ்டு ஃபேன் அல்லது ஜன்னல் போன்ற காற்றோட்டம் இல்லையென்றால், நீங்கள் ஒரு மணிநேரத்தில் 100 பங்கு நைட்ரஜன் டை ஆக்சைட்டை வெளியிடுகிறீர்கள் என்று அர்த்தமாகும். இந்த வாயு அதிகப்படியாக வெளியானால், சுவாச நிலைமைகள் பிரச்னைக்குள்ளாகும்.இது நீண்ட காலம் தொடரும் பட்சத்தில் ஆஸ்துமா போன்ற தீவிர பாதிப்பை உருவாக்கலாம். 
 

இதுதொடர்பாக கார்டியன் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி, எரிவாயு அடுப்புகளை பயன்படுத்தும் வீடுகளில் வசிக்கும் குழந்தைகளில் 42 சதவீதம் பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஒருசிலநேரங்களில் இது இருதய பிரச்னை, நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. எரிவாயு அடுப்பு அல்லது மின்சார அடுப்புகளில் சமைக்கும் போது ஜன்னலை திறந்து வையுங்கள், எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தி காற்றை வெளியேற்றுங்கள். காற்றோட்டமான சமையலறை இருந்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
 

click me!