Nita Ambani: நீதா அம்பானியின் காஸ்ட்லி வாட்டர் பாட்டில் பற்றி தெரியுமா? ஒரு தண்ணி பாட்டில் விலையில் ஒரு வீடே வாங்கலாம்!

Published : Jul 07, 2026, 03:16 PM IST

Nita Ambani : முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்தும் புடவைகள், நகைகள் பல லட்சம், கோடிகளில் இருக்கும். ஆனால், அவர் குடிக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் விலையில், ஒரு நடுத்தரக் குடும்பம் ஒரு வீட்டையே வாங்கிவிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

PREV
14
Nita Ambani Expensive Water Bottle

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரின் மனைவி நீதா அம்பானி ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் ஆவார். அவர் பயன்படுத்தும் புடவைகள், ஹேண்ட்பேக்குகள், நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அவர் பயன்படுத்தும் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை என்ன தெரியுமா? சுமார் ரூ.49 லட்சமாம். இந்த பணத்தில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம், ஒரு டபுள் பெட்ரூம் வீட்டை சுலபமாக வாங்கிவிடலாம். அம்புட்டு காஸ்ட்லியாக இருக்கும் அந்த வாட்டர் பாட்டிலில் அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

24
தண்ணீர் பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை?

நீதா அம்பானி தனது அழகு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். அதற்காகவே, உலகின் மிக காஸ்ட்லியான தண்ணீரைக் குடிக்கிறார். இந்த பாட்டிலை பிரபல மெக்சிகன் டிசைனர் ஃபெர்னாண்டோ அல்தாமிரானோ வடிவமைத்துள்ளார். 24 காரட் தங்கத்தால் ஒரு பெண் முகத்தின் வடிவில் இதை உருவாக்கியுள்ளார். இந்த பாட்டிலில் இருப்பது 'அக்குவா டி கிறிஸ்டல்லோ டிரிபுடோ எ மோடிக்லியானி' (Acqua di Cristallo Tributo a Modigliani) என்ற தண்ணீர். 

34
அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது?

ஃபிஜி, பிரான்ஸ், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரூற்று தண்ணீருடன், 24 காரட் தங்கத் துகள்களும் இதில் கலக்கப்படுகின்றன. இந்த தண்ணீரைக் குடிப்பதால், சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும் என கூறப்படுகிறது. நீதா அம்பானியின் அழகின் ரகசியம் இதுதான் என்றும் பலர் சொல்கிறார்கள்.

44
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

இந்த செய்தி சோஷியல் மீடியாவில் பரவியதும், நெட்டிசன்கள் விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 'இவ்வளவு காஸ்ட்லி பாட்டிலைக் கழுவ எந்தத் தண்ணியை யூஸ் பண்ணுவாங்க?' என்று சிலர் கிண்டலாகக் கேட்கின்றனர். அதே சமயம், சிலர் இது உண்மையாகவே 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாட்டில்தான் என்று கூற, வேறு சிலரோ இது வெறும் வதந்தி, இதில் உண்மையில்லை என்றும் விவாதித்து வருகின்றனர். சிலரோ அவரை காசின் அருமை தெரியாதவர்கள் தான் இப்படி வீண் செலவு செய்வார்கள். அந்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவலாம் என அறிவுறுத்துகிறார்கள். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories