
என் இளமையின் ரகசியம் இதுதான் ! நீதா அம்பானி வெளியிட்ட ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி வீடியோ !
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நிதா அம்பானி. இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்லாமல் ஆரோக்கியம் மற்றும் சுய கவனிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர் ஆவார். சர்வதேச மகளிர் தினமான இன்று உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு வலிமை, சுய கவனிப்பு மற்றும் நல்வாழ்வு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், 61 வயது என்றால் பலரும் ஓய்வெடுக்கும் நேரம் என்று கருதும் நிலையில்.. நிதா அம்பானி இந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். வயது என்பது வெறும் நம்பர் என்பதை உணர்ந்து வாழ்ந்து வருகிறார். 50 வயதை கடந்து விட்டால்.. வயதாகிவிட்டது என்று நினைப்பவர்களுக்கும் இவர் ஒரு உத்வேகமாக செயல்படுகிறார் என்றால் அதில் ஐயமில்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடங்கலாம் என்பதை நமக்கு வலியுறுத்தி நீதா அம்பானி வெளியிட்ட ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி வீடியோ !