Sticker Removal Hack: கிஃப்ட் பாக்ஸ் கிழியாம பிரைஸ் ஸ்டிக்கரை எடுப்பது எப்படி? இதோ சூப்பர் ஐடியா!

Published : Sep 13, 2026, 02:21 PM IST

Sticker Removal Hack: கிப்ட் பாக்ஸ் மீது ஒட்டப்பட்டிருக்கும் விலை ஸ்டிக்கரை நகத்தால் சுரண்டி எடுக்கும்போது, காகிதம் கிழிந்து அதன் தோற்றம் பாழாகிவிடுகிறதா? வெறும் ஐந்து விநாடிகளில் ஸ்டிக்கரை எளிதாக அகற்றுவது எப்படி என பார்ப்போம்.

PREV
15
கிஃப்ட் பாக்ஸ் கிழியாம பிரைஸ் ஸ்டிக்கரை எடுப்பது எப்படி?

பிறந்தநாள், திருமணம் போன்ற சிறப்பான நிகழ்வுகளுக்கு நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்கும் பொழுது, அதில் விலை குறிப்பிடப்பட்டிருப்பது (Price Tag / MRP) ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த ஸ்டிக்கரை கையால் சுரண்டி அகற்ற முயன்றால், பெட்டியின் காகிதம் கிழிந்துவிடும். எனினும், இனி அந்தக் கவலை இன்றி, வெறும் ஐந்து விநாடிகளில் ஸ்டிக்கரை நீக்குவதற்கான இரண்டு சிறந்த வழிமுறைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

25
1. நெயில் பாலிஷ் ரிமூவர் (Nail Polish Remover)

பொதுவாகப் பெண்களிடம் நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது ரிமூவர் துடைப்பான்கள் (Wipes) இருக்கும். சிறிய பஞ்சில் ரிமூவர் திரவத்தை எடுத்து, விலை அச்சிடப்பட்ட பகுதியில் லேசாகத் தேய்க்கவும். சில விநாடிகளில், அந்த அச்சு அல்லது ஸ்டிக்கர் பசை எத்தகைய கரையும் இன்றி சுத்தமாக மறைந்துவிடும்.

35
2. பர்ஃபியூம் (Perfume / Body Spray)

வீட்டில் நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லையா? கவலைப்பட வேண்டாம்; பர்ஃபியூம் பயன்படுத்தலாம். விலை அச்சிடப்பட்ட இடத்தில் கொஞ்சம் பர்ஃபியூம் அல்லது பாடி ஸ்ப்ரே அடித்துவிட்டு, ஒரு திசுத்தாளைக் கொண்டு துடைத்தால் போதும், விலை ஸ்டிக்கர் எளிதாக வந்துவிடும்.

45
3.அயர்ன் பாக்ஸ்

பரிசுப் பெட்டிகள் அல்லது புத்தகங்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்குவதற்கு எளிய முறை ஒன்றுள்ளது. ஸ்டிக்கரின் மீது ஒரு மெல்லிய தாள் அல்லது பருத்தித் துணியை வைக்க வேண்டும். பின்னர், லேசாக சூடேற்றப்பட்ட அயர்ன் பாக்ஸை அந்தத் தாளின் மீது வைத்து 5 முதல் 10 விநாடிகள் அழுத்த வேண்டும். வெப்பத்தின் காரணமாக ஸ்டிக்கரின் பசை உருகிவிடும். இப்போது கையால் மெதுவாக எடுத்தால், ஸ்டிக்கர் முழுமையாக வந்துவிடும்.

55
இனி டென்ஷன் இல்லை

இந்த குறிப்புகள் வெறும் ஸ்வீட் பாக்ஸ் அல்லது ராக்கி பாக்ஸுக்கு மட்டுமல்ல; நீங்கள் எந்தப் பொருளைப் பரிசாகக் கொடுத்தாலும், அதற்கு முன்பு இந்தத் டெக்னிக்கைப் பயன்படுத்தி விலை ஸ்டிக்கரை அகற்றிவிடலாம். இனி யாருக்காவது பரிசு வழங்கும்போது விலை தெரியுமே என்ற டென்ஷன் ஆகவே வேண்டாம்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories