அவற்றில் நாம் உட்காரும் முறையும் நாற்காலியும் கூட நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த வாழ்க்கை முறை என்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி என நாள்பட்ட உடல் உபாதைகளால் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கும் நீங்கள் அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதே முக்கியக் காரணம். எனவே, போதுமான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்கின்றனர்.