1965ம் ஆண்டு சோலையாறு அணை திறக்கப்பட்டது. இதன் உயரம் 66 மீ ஆகும். சோலையாறு அணை நீளம் 6 முதல் 7 கி.மீ நீளம் கொண்டது. சோலையின் மொத்த கொள்ளவு 150.20 மில்லியன் கன மீட்டர் ஆகும்.பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளாக சோலையாறு அணை, கீழ்நீரார் அணை, மேல்நீரார் அணை உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி 1961-ல் தொடங்கி, 1971-ல் முடிக்கப்பட்டது. இந்த சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 72 சதுர கிலோமீட்டர், நீரார் அணை 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.