Aadi Sevvai 2022: திருமண தடைகளை நீக்கும்...ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு முறைகளும்...

Published : Jul 18, 2022, 03:32 PM IST

Aadi Sevvai 2022: ஆடி மாத மாதம் என்றால் அம்மன் மாதமாகும். ஆடி மாதத்தில் செவ்வாய் கிழமை மட்டுமின்றி, ஆடி மாத வெள்ளிக்கிழமை முக்கிய துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

PREV
15
Aadi Sevvai 2022: திருமண தடைகளை நீக்கும்...ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு முறைகளும்...
Aadi Sevvai:

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று என்றே கூறலாம். அதாவது ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கி புறப்படுகிறார். ஆடி மாதம் இந்த ஆண்டில் ஜூலை 17 பிறந்தது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு குறைவு இருக்காது. 

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியுடன் சூரியன் கூட்டணி...இந்த 4 ராசிகளுக்கு சூப்பர் யோகம் ஆரம்பம்.. வாழ்வில் ஜெயம் உறுதி

25
Aadi Sevvai:

ஆடி செவ்வாய்:

செவ்வாய்க்கிழமை என்றாலே அம்பாளுக்கு உகந்த நாள் தான். அதிலும் ஆடி மாதம் வரக்கூடிய இந்த செவ்வாய் கிழமை அன்று அம்பாளை வழிபடுவதால் வேண்டிய வரத்தை அள்ளி தருகிறார். அம்மனை எப்படி, வழிபாடு செய்வது என்பதை பற்றிய சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

35
Aadi Sevvai:

ஒளவையார் விரதம்:

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. இந்த நாளில் இரவு 10 மணியளவில் ஒளவையார் அம்மனை நினைத்து வழிபாடு செய்வார்கள். இந்த விரதம் கணவனின் ஆயுளை நீடிக்கவும்,  குழந்தை வரம் பெறவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கவும் செய்கிறது . 

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியுடன் சூரியன் கூட்டணி...இந்த 4 ராசிகளுக்கு சூப்பர் யோகம் ஆரம்பம்.. வாழ்வில் ஜெயம் உறுதி

45
Aadi Sevvai:

குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. எனவே, நீங்கள் காலையில் எழுந்ததும் தலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, மஞ்சள் பூசி, உங்கள் வீட்டின் அருகில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில் இந்த பரிகாரம் செய்யலாம். ஆடி செவ்வாய் கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு விரதமிருந்து வழிபடுதல், அம்மனுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியுடன் சூரியன் கூட்டணி...இந்த 4 ராசிகளுக்கு சூப்பர் யோகம் ஆரம்பம்.. வாழ்வில் ஜெயம் உறுதி

55

அம்மன் வழிபாட்டின் பலன்கள்:

ஒளவையரை நினைத்து வழிபட்டு வந்தால், நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமண தடை நீங்கும். கணவனின் ஆயுள் கூடும். தொழிலில் வெற்றி தேடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொட்டது எல்லாம் பக்தர்களுக்கு வெற்றியாக அமையும்.

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: சனியுடன் சூரியன் கூட்டணி...இந்த 4 ராசிகளுக்கு சூப்பர் யோகம் ஆரம்பம்.. வாழ்வில் ஜெயம் உறுதி

click me!

Recommended Stories