தோசைக்கல்லில் அடி பிடிக்காமல், எண்ணெய் பாட்டிலை பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய..நச்சுனு 5 கிச்சன் டிப்ஸ்

First Published Aug 12, 2022, 11:49 AM IST

Veetu Kurippugal-Useful kitchen tips: நம்முடைய வீட்டில் தினம்தோறும் பயன்படும் பயனுள்ள குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Useful kitchen tips:

சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை இல்லத்தரசிகளின் பெரும்பாலான நேரம் சமையல் அறையில் தான் இருக்கும். அப்படியாக, இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையலறை பற்றிய இந்த குறிப்புகளை எல்லாம் இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொண்டால் வேலை சுலபமாகிவிடும். அத்துடன், இல்லத்தரசிகளுக்கு கணவரிடம் பாராட்டை வாங்கும் இந்த குறிப்புகளை பார்க்கலாம். நீங்களும் வீட்டில் கிச்சன் குயின் ஆகலாம்.

மேலும் படிக்க....Kitchen tips: சர்க்கரையில் எறும்பு வராமல், ஊறுகாய் கெட்டுப்போகாமல் பாதுகாக்க..அட்டகாசமான கிச்சன் டிப்ஸ்

Useful kitchen tips:

டிப்ஸ்1:

சில சமயம் அடுப்பை பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர் சரியாக எரியாது. வாங்கிய ஒரு சில மாதங்களிலேயே ரிப்பேர் ஆகிவிடும். இதனால் அடிக்கடி லைட்டர் மாற்ற வேண்டி இருக்கும். எனவே, நீங்கள்  லைட்டரை பற்ற வைத்தால் நெருப்பு வரக்கூடிய இடத்தில் இருக்கும் அழுக்கை காது குடையும் பட்ஸை வைத்து எண்ணெய் பிசுக்கை நீக்கி விட்டால், லைட்டர் சூப்பரா வேலை செய்யும்.

Useful kitchen tips:

டிப்ஸ் 2:

நாம் நீண்ட நாட்கள் மசாலா பொருட்கள் கொட்டி வைத்து பயன்படுத்தும் டப்பாவில் ஈரப்பதம் நிறைந்து பூசனம் பிடித்து வாடை வர ஆரம்பிக்கும். எனவே, நீங்கள் இது போன்ற நேரத்தில் சின்ன சின்ன காய்ந்த தேங்காய் ஓடுகளை அதில் போட்டு வைத்தால் ஈரப் பசையில் பூசனம் பிடிக்காமல் வைத்துக் கொள்ளலாம்.

Useful kitchen tips:

டிப்ஸ 3 :

நாம் சில நேரம் தோசைக்கல்லை அடுப்பின் மேலே வைத்து விட்டு மறந்து விடுவோம். இதனால், தோசை கல்லில் தோசை வராது. இது போன்ற சமையத்தில் தோசைக்கல்லின் மேலே கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட் போட்டு தடவி சுத்தம் செய்துவிட்டு, அந்த தோசை கல்லின் மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு, புளி தேய்த்து கழுவினால் அதன் பிசுபிசு தன்மை போகும். பிறகு நீங்கள் தோசை சுட்டால் ஹோட்டல் ஸ்டைல் தோசை மாதிரி சூப்பராக வரும்.

Useful kitchen tips:

டிப்ஸ் 4:

பிளாஸ்டிக் பாட்டில்களை விட கண்ணாடி பாட்டிகள் எண்ணெய் ஊற்றி ஸ்டோர் செய்வது நல்லது. ஆனால், கண்ணாடி பாட்டிலுக்கு உள்ளே சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. பாட்டிலுக்கு உள்ளே கை போகாது. எனவே, நீங்கள் பாட்டிலுக்கு உள்ளே கொஞ்சமாக பேஸ்ட்டை போட்டு சுடு தண்ணீரை ஊற்றி இரண்டு முறை குளிக்கி கீழே ஊற்றினால் அதன் பிசுபிசுப்பு நிறைந்த எண்ணெய் பாட்டில் ஒரு நொடி பொழுதில் சுத்தமாகிவிடும்.

மேலும் படிக்க....Kitchen tips: சர்க்கரையில் எறும்பு வராமல், ஊறுகாய் கெட்டுப்போகாமல் பாதுகாக்க..அட்டகாசமான கிச்சன் டிப்ஸ்

Useful kitchen tips:

டிப்ஸ் 5:

வீட்டில் பாத்ரூமில் இருக்கும் கண்ணாடி, டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, மூக்கு கண்ணாடி, என்று எல்லா கண்ணாடியையும் பளிச்சென்னை துடைப்பதற்கு, உங்கள் வீட்டில் இருக்கும் சேனிடைசர் துணியில தொட்டு கண்ணாடியை துடைத்து பாருங்க. கண்ணாடி ப்ளீச் என்று மாறிவிடும்.

மேலும் படிக்க....Kitchen tips: சர்க்கரையில் எறும்பு வராமல், ஊறுகாய் கெட்டுப்போகாமல் பாதுகாக்க..அட்டகாசமான கிச்சன் டிப்ஸ்

click me!