புத்துணர்ச்சியான இளமை காலத்தை கொண்டாடும் சர்வதேச இளைஞர் தினம்...இதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா..?

Published : Aug 12, 2022, 10:56 AM IST

International Youth Day 2022: சர்வதேச இளைஞர் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், இந்த 2022 ஆம் ஆண்டின் வரலாறு பற்றியும்  இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

PREV
16
புத்துணர்ச்சியான இளமை காலத்தை கொண்டாடும் சர்வதேச இளைஞர் தினம்...இதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா..?
International Youth Day

சர்வதேச இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியை சர்வதேச இளைஞர் தினமாக அறிவித்தது. முதல் சர்வதேச இளைஞர் தினம் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..
 

 

26
International Youth Day 2022:

ஐக்கிய நாடுகள் சபை 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் என வரையறுத்துள்ளது. சர்வதேச இளைஞர் தினம் இளம் திறமைகளை அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொது வாழ்வில் இளைஞர்களின் உரிமையை வலியுறுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இதனை உலக நாடுகள் கொண்டாடுகின்றன.

 

36
International Youth Day 2022:

இந்திய நாட்டிற்கு சுவாமி விவேகானந்தர் வழங்கிய சிறந்த பாதையின் தன்மையை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்தநாளை 'தேசிய இளைஞர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. 

46
International Youth Day 2022:

சர்வதேச இளைஞர் தின தீம்

சர்வதேச இளைஞர் தினத்தின் 2022 இன் கருப்பொருள் "தலைமுறை ஒற்றுமை: அனைத்து வயதினருக்கும் ஒரு உலகத்தை உருவாக்குதல்". போன்றவை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிகழ்ச்சி நிரல் 2030 இன் படி நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைய எல்லா தலைமுறைகளிலும் நடவடிக்கை தேவை என்ற செய்தியை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.


 

56
International Youth Day 2022:

இந்த தினத்தின் முக்கியத்துவம்:

உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்கள் உடல் அல்லது மன ஆரோக்கியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல பிரச்சினைகளுடன் போராடி வருவதால் அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக சர்வதேச இளைஞர் தினம் முக்கியமானது.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..

 

66
International Youth Day 2022:

உலகம் முழுவதும் இளைஞர்கள் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை அங்கீகரிப்பதற்கு இந்த தினம் உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்கும் இன்னல்கள், இதனால் பாதிக்கப்படும் அவர்களின் மனநலம் குறித்த முக்கியமான விவாதங்களும் இன்றைய தினத்தில் பேசப்படுகின்றன. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல்வேறு நிறுவனங்கள் இன்றைய தினத்தில் விவாதங்கள், பிரச்சாரங்கள் மற்றும் பேச்சுக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..
 

click me!

Recommended Stories