
காதல் வாரத்தின் நான்காம் நாள் தான் டெடி தினம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களுடைய காதலிக்கு டெடி பெயரை பரிசாக கொடுப்பார்கள். ஏன் புதியதாக காதலை சொல்லுபவர்களும் கூட தான் விரும்பும் பெண்ணிற்கு டெடி பியரை வாங்கிக் கொடுப்பார்கள். டெடி பியர் ஒரு அழகான பொம்மை மட்டுமல்ல, அது உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் சின்னமாக கருதப்படுகிறது. இருப்பினும் டெடி பியரின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மறைந்திருப்பது உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில், இந்த 2025 ஆம் ஆண்டின் டெடி தினம் இன்று என்பதால், உங்கள் காதலிக்கு நீங்கள் டெடி பியரை வாங்கிக் கொடுக்க நினைத்திருந்தால், முதலில் டெடி பியரின் ஒவ்வொரு நிறத்திற்கும் உள்ள அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பே டெடி பியர் வரலாறு தொடங்கியது. அதாவது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் ஒருமுறை வேட்டை பயணத்தின் போது ஒரு காதலியை கொல்ல மறுத்ததாக கூறப்படுகிறது அதன்பிறகு காற்று லிஸ்ட் இந்த சம்பவத்தை ஒரு காட்டும் மீண்டும் சித்தரித்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு தான் டெடி பியர் உருவானது. டெடி பியர் காதல், பாதுகாப்பு மற்றும் பாசத்தின் அடையாளமாக கூறப்படுகிறது. முக்கியமாக டெடி பியர் குழந்தைகளின் விருப்பமான பொம்மை மட்டுமல்ல, அது அன்பான தம்பதிகளுக்கு இடையே உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு அன்பின் சின்னம் ஆகும்.
இதையும் படிங்க: உங்க காதலன், காதலிக்கு 'இந்த' கிஃப்ட்ஸ் கொடுங்க.. கடைசி வரைக்கும் மறக்க மாட்டாங்க!
சிவப்பு நிறம் : சிவப்பு நிற டெடி அன்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகும். எனவே நீங்கள் உங்களது காதலிக்கு சிவப்பு நிற டெடியை பரிசாக கொடுத்தால் நீங்கள் அவரை ஆழமாக காதலிக்கிறீர்கள் என்றும், அவர் மீது இருக்கும் உங்களது உணர்வுகள் ரொம்பவே ஆழமானவை என்றும் அர்த்தம். முக்கியமாக இந்த சிவப்பு நிறம் காதலர் தினத்திற்கு மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம்.
இளஞ்சிவப்பு நிறம் : இளஞ்சிவப்பு நிற டெடிபியர் மென்மை பாசம் மற்றும் இனிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. நீங்கள் உங்கள் காதலியிடம் மென்மையான, அன்பான உணர்வுகளை வைத்திருப்பதை சொல்ல விரும்பினால் இந்த நிறத்தில் இருக்கும் டெடி பியர் பெஸ்ட். முக்கியமாக புதிதாக காதலிப்பவர்களுக்கு இந்த இளஞ்சிவப்பு நிற டெடி பியர் ஒரு சிறந்த தேர்வாகும்.
இதையும் படிங்க: காதலர் தினம் 2025: உங்க பார்ட்னருக்கு இந்த 4 பொருளில் '1' கிப்ட் பண்ணாலும் பிரேக் அப் தான்!!
நீல நிறமானது அமைதி நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாகும். உங்க லவ்வரிடம் அமைதியான மற்றும் நிலையான ஒரு உறவை விரும்புவதாக நீங்கள் சொல்ல விரும்பினால் இந்த நிறத்தில் இருக்கும் டெடி பியர் சிறந்த தேர்வாகும்.
கருப்பு நிறம் : கருப்பு நிறம் மர்மம், சக்தி மற்றும் தீவிரத்தின் அடையாளமாகும். இந்த நிறமானது அன்பு, பாசத்திற்கு குறைவாக பயன்படுத்தப்பட்டாலும், நீங்கள் இந்த நிறத்தில் இருக்கும் டெடி பியரை உங்களது காதலிக்கு பரிசாக கொடுத்தால் நீங்கள் அவர் மீது தீவிரமான மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் நட்பின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் காதலியுடன் நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்க விரும்பினால் இந்த நிறத்தில் இருக்கும் டெடி பியர் சரியான தீர்வாகும்.
ஊதா நிறம் : இந்த நிறம் அரச குடும்பம், ஆடம்பரம் மற்றும் மர்மத்தைக் குறிக்கின்றது. உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்று நீங்கள் சொல்ல விரும்பினால், இந்த நிறத்தில் இருக்கும் டெடி பியர் வாங்கி கொடுங்கள். ஆழமான மற்றும் மர்மமான உறவுகளுக்கு ஊதா நிறத்தில் இருக்கும் டெடி பியர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆரஞ்சு நிறம் என்பது உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதாவது இந்த நேரத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த நபருக்கு டெடி பியர் வாங்கி கொடுத்தால் அந்த உறவை நீங்கள் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
பச்சை நிறம் : பச்சை நிற ஞானத்தின் அடையாளமாகும். உங்களது காதலன் உங்களுக்கு பச்சை நிறத்தில் டெடி பியர் வாங்கி கொடுத்தால், அவர் உங்களை எந்த சிரமத்திலும் தனியாக விட்டு விட மாட்டார் என்று அர்த்தம்.
வெள்ளை நிறம் : வெள்ளை நிறத்தில் இருக்கும் டெடி பியர் அமைதியையும் அப்பாவித்தனத்தையும் குறிக்கிறது. எனவே, நீங்கள் ஒருவருக்கு இந்த நிறத்தில் டெடி பியரை பரிசாக கொடுக்க விரும்பினால் நீங்கள் அந்த நபர் மீது தூய்மையான மற்றும் நேர்மையான உணர்வை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அர்த்தம் ஆகும்.
- நீங்கள் டெடி பியரை வாங்கும்போது எந்த வகையான உறவில் இருக்கிறீர்கள் என்பதில் முதலில் நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப சரியான டெடிபியர் நிறத்தை தேர்வு செய்யுங்கள்.
- அதுபோல உங்களது காதலியின் விருப்பத்தையும் மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நிறத்தை அவர் விரும்பினால், அந்த நேரத்தில் டெடி பியர் வாங்கி கொடுங்கள்.
- நீங்கள் வாங்கும் டெடிபியரின் அளவு ரொம்பவே முக்கியமானது. அதாவது நீங்கள் விரும்பும் நபர் ரொம்பவே சிறப்பு வாய்ந்தவர் என்று அவரை உணர வைக்க விரும்பினால் பெரிய டெடி பியர் வாங்கிக் கொடுங்கள். மறுபுறம் உங்களது அன்பை ஒரு சிறிய பரிசு மூலம் கொடுக்க விரும்பினால் சிறிய டெடி பியர் வாங்கி கொடுக்கலாம்.
- டெடி பியர் வாங்கும் முன் அதன் தரத்தை கவனிக்கவும். அதாவது ஒரு நல்ல தரமான டெடி பியர் வாங்கி கொடுத்தால் நீண்ட காலம் நீடிப்பது மட்டுமல்லாமல், உங்கள் அன்புக்குரிய வரை முழுமையாக உணர வைக்கும்.