இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. இம்முறை சூரிய கிரகண நேரத்தில் சூரியனுடன் கிரங்களின் முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது ஆகியவை ஏற்கனவே துலாம் ராசியில் இருப்பதால், புதிய யோகம் ஒன்று உருவாக போகிறது. மேலும், இதன் மது சனியின் பார்வை விழுவதால், குறிப்பிட்ட ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
துலாம்:
சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகி வருவதாலும் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். நம்பிக்கை குறையும். ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். வேலையில் எச்சரிக்கையாக இருங்கள்.மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும்.
மிதுனம்:
சூரிய கிரகணத்தால் உருவாகும் புதிய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்கிறது. திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டு பிரச்சனைகள், செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வரலாம். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.