வெறும் 5 ரூபாய் செலவில் இந்த 1 பொருளை வைத்து...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை பளிச்சென்று சுத்தம் செய்யலாம்!

First Published Oct 17, 2022, 1:01 PM IST

Bathroom cleaning tips in tamil: உப்பு கறை மற்றும் அழுக்கு நிறைந்துள்ள பாத்ரூம் வாலி மற்றும் மக்குகளை சுத்தம் செய்ய, கீழே குறிப்பிட்டுள்ள ஈஸியான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

குளியலறையில் இருக்கும் விடாப்பிடியான உப்பு கறைகள் சுத்தம் செய்ய கறை படிந்த பகுதியை ஒரு காகித துண்டு வைத்து நன்கு துடைக்கவும். வெதுவெதுப்பான நீரில் சிறிது லிக்விட் டிஷ் சோப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு சுத்தமான துணியை கரைசலில் நனைத்து, அந்த பகுதியை நன்கு துடைக்கவும். பின்னர் அந்த இடத்தை தண்ணீர் வைத்துக் கழுவவும்.
 

, பாத்ரூம் வாலி மற்றும் மக்குகளை சுத்தம் செய்ய நாம் அடிக்கடி மெனக்கெட வேண்டி இருக்கும். இதற்கு நீங்கள்  ஒரு கைப்பிடி அளவிற்கு கோலமாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன், பேக்கிங் சோடா, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அதன் பிறகு இரும்பு நார் கொண்டு லேசாக தேய்த்து எடுத்தால் எல்லா உப்பு கறையும் வெளியே வந்துவிடும். அழுக்குகளும் நீங்கி புதிதாக வாங்கிய பக்கெட் போல மின்னும்.

ஒரு சுத்தமான துணியில் கரைசலைப் நனைத்து, கறை படிந்த பகுதியை துடைக்கவும். அந்த பகுதியை தண்ணீரை அடித்துக் கழுவவும்.மேலும் கறை இருந்தால் பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து ஒரு பேஸ்ட்டை தயாரிக்கவும்.

 மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

இதற்கு நீங்கள் முதலில் வீட்டில் கோல்கேட் பேஸ்ட் இருந்தால், அதனை கெட்டியாக தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர், பாத்ரூமில் இருக்கும்  வாளி, பாக்கெட்டை கழுவி பாருங்கள். பளிச்சு பளிச்சென எல்லா விதமான டைல்ஸ் மற்றும் பீங்கான் டாய்லெட்கள் மின்னும்.

Colgate

அதே போல கிச்சன் சுவற்றில் இருக்கும் டைல்ஸ்களிலும் விடாப்படியான எண்ணெய் கறைகள் இருக்கும். இந்த கறைகளை வாரம் ஒரு முறையாவது கோல்கேட் ஸ்ப்ரே செய்து ஒரு முறை சுத்தமான துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

குளியலறை சிங்கிள் வெதுவெதுப்பான நீரை தெளிக்கவும் அதன் மேல் தாராளமாக உப்பைத் தூவவும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பேஸ்ட்டை ஒரு ஸ்பான்ஜ் மூலம் சின்க்கில் உள்ள கறைகளில் தேய்த்து ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை கறைகளில் ஊற விடுங்கள்.பின்னர் சுத்தம் செய்தால் பளிச்சென்று மின்னும்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

click me!