
பெண்கள் என்றாலே அழகுதான். அதிலும் பூச்சூடிக்கொள்ளும் பெண்கள் கூடுதல் அழகாக தெரிவார்கள். கூந்தலில் பூ வைத்துக் கொள்வது பெண்களுடைய முகத்தை பூரணமாக மாற்றும். அவர்கள் இருக்கும் இடம் ரம்யமான வாசனையால் நிரம்பிவிடுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு பெண்களை சூடிக் கொள்வதில் விருப்பம் அதிகம் இருக்கும். சிலர் தலைவலி காரணமாக பூக்களை தவிர்ப்பார்கள்.
சில பெண்களுக்கு தலை நிறைய பூக்களை வைத்துக் கொள்வதில் அலாதி பிரியம் இருக்கும். தலையில் பூ வைத்துக் கொள்வதால் ஒருவகையான நேர்மறை ஆற்றல் வருவதை பெண்களால் உணர முடியும். பூக்கள் வெறுமனே பெண்களுக்கு அழகைக் கொண்டு வராமல் நேர்மறையான ஆற்றலையும் தருவதாக நம்பப்படுகிறது.
அந்த காலத்தில் பெண்கள் தலையில் எண்ணெய் படிய வாரி இறுக்கமாக கூந்தலை பின்னி அதில் பூக்களை வைத்து அலங்காரம் செய்து கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. எப்போதாவது விசேஷங்களிலோ, கோயிலுக்கு செல்லும்போதோ மட்டுமே நகரத்து பெண்கள் பூக்களை சூடிக் கொள்கிறார்கள். அதுவும் அரிதான விஷயமாக மாறிவிட்டது.
கிராமங்களில் குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் பூச்சூடி கொள்கிறார்கள். வீட்டில் தோட்டம் வைத்து பூ வளர்ப்பவர்கள் தினமும் கூட பூக்களை வைத்துக் கொள்கிறார்கள். இப்படி தினமும் பூக்களை வைத்துக் கொள்வதால் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப நாகரிகமும் மாற்றமடைகிறது. முந்தைய காலங்களில் பெண்கள் தங்கள் தலைமுடியை இறுக்கமாக பின்னிக் கொள்வதிலும், பூச்சூடி கொள்வதிலும் கவனம் செலுத்தினர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தலையை இறுக்கமாக பின்னுவதில் விருப்பம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான பெண்கள் தலையை விரித்து போட்டுக் கொள்கின்றனர். ஆனால் தலையை பின்னினாலும் அல்லது விரித்துப் போட்டாலும் எப்படியாகிலும் பூக்களை வைப்பது அவர்களுக்கு நன்மையை தரும் என சொல்லப்படுகிறது.
தலையை விரித்து போட்டு பூக்களை வைப்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதே சமயம் தலைமுடியை இறுக்கமாக பின்னிக் கொள்வதும் முடியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. தலைமுடி சற்று தளர்வாக பின்னி அதில் பூக்களை வைப்பதால் சில நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகம் சொல்கிறது.
ரோஜாப்பூ:
சில பெண்களுக்கு வாசனை அதிகம் வரக்கூடிய மல்லிகை, பிச்சி போன்ற பூக்களை வைப்பது தலைவலியை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் நாள்தோறும் ரோஜாப் பூ வைப்பதால் தலைசுற்றல் ஏற்படாமல் தடுக்க முடியுமாம். ரோஜாவின் வாசனை தலையில் உள்ள பாரத்தை குறைத்து தலை சுற்றலை தடுக்கும் என சொல்லப்படுகிறது.
மல்லிகை பூ:
தலையில் மல்லிகை பூ வைத்துக் கொள்வது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மல்லிகை பூவை கூந்தலில் சூடிக்கொள்ளும் பெண்களுக்கு மனதில் நிம்மதி பிறக்குமாம். மன அழுத்தம் குறையும் என்கிறார்கள் ஆன்மீக பெரியோர். சில பெண்கள் மல்லிகை பூவை வைத்துக் கொள்ளும்போது தலை சுற்றுவதாக கூறி அதை வைப்பதை தவிர்ப்பார்கள்.
சிலருக்கு இந்த பூ ஒவ்வாமையை ஏற்படுத்துவது உண்மைதான். அதன் அதீதமான வாசனை மூச்சு திணறல், தலை சுற்றலை ஏற்படுத்தலாம். இவர்கள் மற்ற பூக்களை முயற்சி செய்யலாம். மல்லிகை பூவை தலைக்கு வைப்பதால் கண்கள் குளிர்ச்சியாகும்.
செண்பகப்பூ & தாழம்பூ:
செண்பகப்பூ மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும். இதனை தொடுத்து தலையில் வைப்பதால் கண் பார்வை கூர்மையாகும் என சொல்லப்படுகிறது. உங்களுடைய உடல் சோர்வாக காணப்பட்டால் தாழம்பூவை சூடிக்கொள்ளலாம். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும் தாழம்பூ வெறும் வாசனையோடு மட்டுமில்லாமல் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
தாமரை பூ:
பெரும்பாலான பெண்கள் தாமரைப் பூவை தலையில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தாமரை பூவினை தலையில் வைப்பவர்களுக்கு மனதில் உள்ள எல்லா கவலைகளும் நீங்கிவிடும். புது நிம்மதி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. நீங்கள் அடிக்கடி தாமரை பூவை தலையில் வைப்பதால் உங்களுடைய மன இறுக்கம் மாறி இலகுவாகிவிடுவீர்கள். எப்போதும் புத்துணர்வாக காணப்படுவீர்கள்.
இதையும் படிங்க: அரளி பூ சாப்பிட்டால் உயிர் கூட போகுதே.. அது அவ்வளவு விஷத்தன்மையா..? தெரிஞ்சுக்கலாம் வாங்க..
கனகாம்பரம்:
நகரத்துப் பெண்களை விட கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தான் கனகாம்பரம் பூவை அதிகமாக வைத்துக் கொள்வார்கள். இந்த பூவில் வாசனை இருக்காது. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வாசனை இல்லாத காரணத்தினால் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்பு மிகவும் குறைவு. பெரும்பாலும் இந்த பூக்களை வைக்கும் பெண்களுக்கு தலை வலி ஏற்படவே ஏற்படாது.
ஆன்மீகத்தை பொருத்தவரை, மல்லி பூ, ரோஜா பூ போன்றவற்றை தலையில் சூடி கொள்வதால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஒருவருக்கு மகாலட்சுமியின் அருள் இருந்தாலே அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பெண்களே முடிந்தவரையில் தலையில் பூ வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: இந்த பூக்களை எல்லாம் சாப்பிடலாமா? அதில் உள்ள சிறப்புகள் என்னென்ன!