பற்கள் பலவீனமா இருக்கா? ஸ்ட்ராங்கா ஆக்க 'இந்த' உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..!

Published : Feb 16, 2025, 09:00 AM IST

Healthy Foods For Strong Teeth And Gums : உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் பலவீனமாக இருந்தால் அதை வலுவாக மாற்ற, இந்த சூப்பர் ஃபுட்கள் உங்களது வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

PREV
18
பற்கள் பலவீனமா இருக்கா? ஸ்ட்ராங்கா ஆக்க 'இந்த' உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..!
பற்கள் பலவீனமா இருக்கா? ஸ்ட்ராங்கா ஆக்க 'இந்த' உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..!

நம்முடைய சிரிப்பு நம் முகத்தின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியமாக இருப்பது முழு ஆரோக்கியம் அல்ல வாய்வழி ஆரோக்கியமும் ரொம்பவே முக்கியம் ஆம் வாய்வழி ஆரோக்கியம் நம்மை ஆரோக்கியமாக வைக்கப் பெரிதும் உதவுகிறது தெரியுமா? இருப்பினும் இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் மக்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன. இதனால் பலவீனமான பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை இந்த காலத்தில் பலர் சந்திக்கிறார்கள்.

28
பற்கள் வலுவாக இருக்க சாப்பிட வேண்டியவை

பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள் ஒருவரது தன்னம்பிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல், அவரால் வெளிப்படையாக சிரிப்பதையும் தடுக்கும். அதுமட்டுமல்லாமல், பல சமயங்களில் வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான இந்த பிரச்சனைகள் பெரும் சங்கடத்தை ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்த உங்களது உணவில் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். எனவே உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்த நீங்கள் விரும்பினால், நிச்சயமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்களது உணர்வில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

38
பால்:

பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை மட்டும் அல்ல பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் பால் குடித்து வந்தால் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

48
சீஸ்:

உங்களது உணவில் சீஸ் சேர்ப்பதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்த இது உதவுகிறது. ஏனெனில், சீஸ் கால் சக்தி நல்ல மூலமாக கருதப்படுகிறது. இது தவிர இதில் நல்ல அளவு புரதமும் உள்ளன.

இதையும் படிங்க:  சொத்தை பற்களை தடுக்குமா வாக்கிங்? யாருக்கும் தெரியாத தகவல்!! 

58
தயிர்:

சீஸ் போலவே தயிரிலும் கால்சியம் மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. அவை பற்களில் பலப்படுத்த உதவுகிறது. முக்கியமாக தயிரில் இருக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

இதையும் படிங்க:  பற்களில் மஞ்சள் கறையா? இந்த '2' பழத்தின் தோல் போதும்!! வெள்ளயாக மாறும்..

68
நாட்கள்:

நம்முடைய ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. முக்கியமாக இவை வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே தினமும் இவற்றை சாப்பிடுவதன் மூலம் வாயில் அதிக உமிழ்நீர் சுரக்கப்படுகிறது. இது பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

78
கீரைகள்:

கீரைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலை பல பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் வாயே புத்துணர்ச்சியுடன் வைக்க பெரிதும் உதவுகிறது.

88
பிற உணவுகள்:

- பிரக்கோலி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் பற்களை சுத்தம் செய்வதற்கும் பெரிதும் உதவுகின்றது.

- மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஈறுகளில் நோய் அபாயத்தை குறைக்கின்றன.

- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. இது ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, உங்களது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை இருக்கும். ஆப்பிள் பற்சிப்பியை சுத்தம் செய்து உங்களது ஈறுகளை வலுப்படுத்த உதவும்.

- ஆப்பிளைப் போலவே கேரட் சாப்பிட்டால் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

- திராட்சையில் ஆக்சனேற்றிகள் நிறைந்துள்ளன. இது இரு நோயை தடுக்கவும், ஆரோக்கியமான பற்களை மேம்படுத்தவும் உதவுகின்றது.

Read more Photos on
click me!

Recommended Stories