Winter Health Care : முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை நிவாரணம்! குளிர்க்காலத்துல இந்த 'கருப்பு' விதைகளை சாப்பிடுங்க

Published : Nov 25, 2025, 05:13 PM IST

குளிர்காலத்தில் முடி ஆரோக்கியம் முதல் மூட்டு வலியை குறைப்பது வரை எந்த விதையை சாப்பிடு வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Black Sesame Seeds Benefits In Winter

பொதுவாக குளிர்காலத்தில் பலரும் மூட்டு வலி, எலும்பு பலவீனம், முடி உதிர்தல், வறண்ட சருமம் போன்ற பல பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு 'கருப்பு' விதையால் சரி செய்ய முடியும் தெரியுமா? அதுதான் கருப்பு எள்.

ஆமாங்க, மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படும் கருப்பு எள், குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது மட்டுமின்றி, உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். எனவே குளிர்காலத்தில் கருப்பு எள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

24
குளிர்காலத்தில் கருப்பு எள் சாப்பிடுவதன் நன்மைகள் :

1. எலும்புகளை வலுவாக்கும்:

கருப்பு எள்ளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதை சாப்பிட்டால் வலுவடையும். குறிப்பாக குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க கருப்பு எள் பெரிதும் உதவுகிறது. அதுபோல 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும் அப்போதுதான் எலும்புகள் வலுவாக இருக்கும்.

2. இரும்புச்சத்து குறைப்பாடு :

குளிர்காலத்தில் சில பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் முடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும். இதை சரி செய்வதற்கு கருப்பு எள் உதவும். கருப்பு எள்ளில் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை பிரச்சனை நீங்கும். முடி உதிர்தலும் குறையும்.

34
சருமத்திற்கு நல்லது..

கருப்பு எள்ளில் இருக்கும் துத்தநாகம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க உதவும். மேலும் சருமம் மற்றும் முடியை பளபளப்பாக மாற்றும். இது தவிர, இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து, இளமையாக வைக்க உதவுகிறது. கருப்பு எள்ளில் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வெள்ளை முடி பிரச்சனையை குறைக்கும், பொடுகு பிரச்சனையை நீக்கும்.

44
எப்படி சாப்பிடணும்?

- தினமும் காலையில் ஸ்மூதியில் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஒரு கிண்ணம் தயிரில் ஒரு ஸ்பூன் எள் கலந்தும் சாப்பிடலாம்.

- கருப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது வெள்ளம் கலந்து லட்டு போல செய்து சாப்பிடலாம்.

- தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும். உடல் சூடாகவும் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories