Snake Prevention: வீட்டுக்குள் பாம்பு வராம இருக்கணுமா? 'இந்த' 5 தப்ப மட்டும் பண்ணாதீங்க!

Published : May 12, 2026, 03:11 PM IST

Snake Prevention: வெயில் காலம் வந்தாலே பாம்பு தொல்லை அதிகமாகிடும். சில வீடுகளுக்குள்ள மட்டும் ஏன் பாம்புகள் அடிக்கடி வருது தெரியுமா? அதுக்கு சில வாஸ்து காரணங்களும் இருக்குன்னு நிபுணர்கள் சொல்றாங்க. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
16
விஷ ஜந்துக்களின் நடமாட்டம்

வெயில் அதிகமானால் பூமிக்கு அடியில் இருக்கிற சூடு தாங்க முடியாமல் விஷ ஜந்துக்கள் வெளியே வர ஆரம்பித்து விடும். அதிலும் பாம்புகள், சில சமயம் நேராக வீட்டுக்குள்ளேயே வந்து விடும். இதுக்கு இயற்கை மட்டும் காரணம் இல்ல, நாம் செய்யும் சில தவறுகளும், சுத்தம் இல்லாததும்தான் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சொல்றாங்க. வாஸ்துபடி, எங்கு நெகட்டிவ் எனர்ஜி அதிகமா இருக்கிறதோ அங்கு இந்த மாதிரி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கும்.

26
குப்பைகளை கண்ட இடத்தில் போடாதீங்க

வாஸ்து சாஸ்திரத்தின்படி குப்பையும் அழுக்கும் ராகுவின் சின்னமாக‌ பார்க்கப்படுகிறது. பழைய சாமான்கள், அட்டைப் பெட்டிகள், உடைந்த பொருட்களை வீட்டில் சேர்த்தால் அங்கு எலிகள் குடியேறிடும். பாம்புகளுக்கு எலிதான் முக்கிய உணவு. அதனால, எலியோட வாசனையை பிடிச்சுக்கிட்டே பாம்புகள் சுலபமாக உங்கள் வீட்டுக்குள் வந்துவிடும். அதனால் ஸ்டோர் ரூமை அடிக்கடி சுத்தம் பண்றது ரொம்ப முக்கியம்.

36
ஒட்டடை படிந்த இருண்ட மூலைகள்

நிறைய பேர் வீட்டில் இருக்கிற ஒட்டடையை கண்டுக்கவே மாட்டார்கிஅள். ஆனால் வாஸ்துபடி, ஒட்டடைங்கிறது நெகட்டிவ் எனர்ஜியோட மையம். இதனால குடும்பத்தில் குழப்பம், மன அமைதி இல்லாமல் போகும். பாம்புகளுக்கு எப்போதுமே இருட்டான, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பதுங்கி இருக்கத்தான் பிடிக்கும். ஒட்டடை பிடித்த மூலைகள், பாம்புகளுக்கு பாதுகாப்பான இடமாக மாறி விடுகிறது.

46
ஈரப்பதம் உள்ள இருட்டு மூலை

வாஸ்து புருஷ தத்துவப்படி, ஒரு வீட்டின் தலைப்பகுதி 'ஈசான்ய மூலை'தான். இந்த திசை எப்போதுமே புனிதமாக காலியாக வெளிச்சமாக இருக்க வேண்டும். ஈசான்ய மூலையில ஈரப்பதம் இருந்தாலோ, குப்பை போட்டாலோ, அல்லது இருட்டா வெச்சிருந்தாலோ வாஸ்து தோஷம் உண்டாகும். குளிர்ச்சியைத் தேடி வரும் பாம்புகள், இந்த மாதிரி ஈரமான, இருட்டான மூலைகளை தங்களோட இருப்பிடமாக மாற்றிக் கொள்ளும்.

56
வீட்டுக்கு அருகே இருக்கக் கூடாத மரங்கள்

வாஸ்துபடி, வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் புளிய மரம் அல்லது பருத்திச் செடி இருப்பது அசுபமாம். இந்த மரங்கள் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் என்று பெரியவர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புளிய மரத்தின் அடர்த்தியான கிளைகளும், பருத்திச் செடியைச் சுத்தி இருக்கிற சூழலும் பாம்புகள் பதுங்கிக்கொள்ள வசதியான ஒரு இடத்தை உருவாக்குகிறது. வீட்டைச் சுற்றி தேவையில்லாத செடிகளும், புதர்களும் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் மையப் பகுதியை பிரம்மஸ்தானம் என்று சொல்வார்கள். இது ஆகாய தத்துவத்துடன் தொடர்புடையது. இங்கே காற்றும் வெளிச்சமும் தாராளமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த இடத்தில் கனமான அலங்காரப் பொருட்கள் அல்லது எடை அதிகமான சாமான்களை வைத்தால் சக்தி ஓட்டம் தடைபடும். இது வீட்டுக்குள் ஒருவித பாரத்தையும், உஷ்ணத்தையும் உருவாக்கும். இப்படி தேங்கிப்போன சக்தி இருக்கிற இடத்துக்குள் விஷ ஜந்துக்கள் ஈர்க்கப்படும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.

66
பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்வது?

சர்ப்பகந்தி மற்றும் துளசி: உங்கள் வீட்டு வாசலில் அல்லது வீட்டு வளாகத்தில் சர்ப்பகந்தி செடியை நடுங்கள். இந்த செடியோட வாசனைக்கு பாம்புகள் பக்கத்துல வராது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அதேபோல, துளசிச் செடி வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகமாக்கி, விஷ வாயுக்களை தடுக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் உறுதியான உண்மையோ அல்லது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதோ அல்ல. தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன் வாஸ்து நிபுணர்களைத் தொடர்புகொள்வது நல்லது.)

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories