1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் குருவின் விசேஷ யோகம்..இன்று இந்த ராசிக்கு லட்சுமி தேவியின் அருள் உண்டு

Published : Aug 25, 2022, 03:52 PM IST

Guru Pushya Yoga: வாழ்வில் ஒருமுறை மட்டுமே பார்க்க இயலும், குரு புஷ்ய யோகம் 1500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வந்திருக்கிறது.இதன் நாளில் எந்த ராசிகளுக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம். 

PREV
15
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் குருவின் விசேஷ யோகம்..இன்று இந்த ராசிக்கு லட்சுமி தேவியின் அருள் உண்டு
Guru Pushya Yoga:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருபகவான் அல்லது வியாழன் கிரகம் செல்வம், புகழ், அறிவு, வருமானம், நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே, ஒருவரது ஜாதகத்தில் குருவானது நல்ல நிலையில், இருக்க வேண்டியது அவசியம். ஒருவரது வாழ்வில் குருவின் அருள் கிடைத்தால் அவர் எந்த நிலை இருந்தாலும், பெறும் செல்வந்தராகும் யோகம் கிடைக்கும். அப்படியான ஒரு நாள் தான் இன்று. ஆம், இன்றைய தினம்  2022, ஆகஸ்ட் 25ம் நாளன்று குரு புஷ்ய யோகம் 1500 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கிறது. 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

 

25
Guru Pushya Yoga:

இந்த நாள் மீண்டும் வருவதை பார்க்க நாம் உயிருடனே இருக்க மாட்டோம். குறிப்பாக, வியாழன் கிழமை அதாவது இன்று குரு பகவான் பூச நட்சத்திரம் வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதேபோன்று, இன்று, குரு புஷ்ய யோகத்துடன், சர்வார்த்தசித்தி, அமிர்தசித்தி, போன்ற மிகவும் மங்களகரமான யோகங்களும் உண்டாகும். இது தவிர சந்திரன் கடகத்திலும், புதன் கன்னியிலும், சனி மகரத்திலும், சூரியன் தன் சொந்த ராசியான சிம்மத்திலும் இன்று இருப்பார்கள். வாழ்வில் நாம் காண கிடைக்காத இந்த அதிசயங்கள் நிகழ்ந்துள்ள நாளில் யாருக்கு சூப்பர் பலன் உண்டு என்பதை பார்க்கலாம். 

 

35
Guru Pushya Yoga:

கடகம்:

இன்று உங்களுக்கு அன்னை லட்சுமி தேவியின் நேரடி அருள்  கிடைக்கும். எனவே, இன்று நீங்கள் அன்னை லட்சுமி தேவியை பூஜித்து அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இன்று பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம்.
 

45
Guru Pushya Yoga:

மகரம்:

 இன்று நீங்கள் எந்த பொருட்களை வாங்கினாலும் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த நாளில் நீங்கள் சொத்து-வாகனம் வாங்குவது சுபமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். குடும்பத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்வில் புதிய வேலையைத் தொடங்குவதற்கும், பரிவர்த்தனைகளுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

55
Guru Pushya Yoga:

தனுசு: 

இற்று நீங்கள் அன்னை லட்சுமி தேவியை பூஜித்து அருளை பெற வேண்டும். இன்று நீங்கள் நகை, ஆடை, மஞ்சள் வாங்குவதும் நல்லது. அதிர்ஷ்டத்தின் உதவியால் எடுத்த வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். வேலை தேடுபவர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரும் வெற்றி பெறுவார்கள். வீடு-அலுவலகம் திறப்பதற்கும், புதிய வேலையைத் தொடங்குவதற்கும், பரிவர்த்தனைகளுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மொத்தத்தில் சுபமாக இருக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

Read more Photos on
click me!

Recommended Stories