குழந்தைங்க படித்ததும் மறக்கிறார்களா? ஈஸியா ஞாபகம் வச்சுக்க '5' சூப்பர் டிப்ஸ்

First Published | Dec 5, 2024, 12:45 PM IST

Study Tips For Kids : உங்கள் குழந்தைகள் தங்கள் படித்ததை நினைவில் வைத்து கொள்ள சில வழிமுறைகளை மட்டும் கடைப்பிடித்தால் போதும், அவர்கள் படித்த அனைத்தையும் நினைவில் வைத்து கொள்ள முடியும். 

Study Tips For Kids In Tamil

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் மிகப் பெரிய சொத்து எதுவென்றால், அது கல்வி மட்டும் தான். இது இல்லையென்றால், அவர்களால் வாழ்க்கையில் நிச்சயமாக ஜெயிக்க முடியாது. ஏனெனில், தற்போது நாம் போட்டி உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால் கல்வி தான் குழந்தைக்கு மிகப் பெரிய சொத்தாகும். 

Memory consolidation in kids in tamil

இதனால் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்க விரும்புவதால், உயர்ந்த பள்ளி கூடங்களில் படிக்க வைக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் மணிக்கணக்கில் படித்தால் கூட அவர்களால் படித்ததை நினைவில் வைத்து கொள்ள முடியாது.  அந்தவகையில், விடாமுயற்சியுடன் படித்தும், தேர்வு நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் குழந்தைகள் சில வழிமுறைகளை மட்டும் கடைப்பிடித்தால் போதும், அவர்கள் படித்த அனைத்தையும் நினைவில் வைத்து கொள்ள முடியும். 

இதையும் படிங்க:  பெற்றோர் செய்யும் இந்த '3' தவறுகள்.. குழந்தைகள் படிப்பை பாதிக்கும்!!

Tap to resize

How to improve memory in kids in tamil

குழந்தைகள் படித்ததை நினைவில் வைத்து கொள்ள 5 வழிகள்:

1. நேரத்தை அமைக்கவும்

உங்கள் பிள்ளை படித்தை நினைவில் வைத்து கொள்ள முதலில் அவர்கள் படிப்பதற்கான சரியான நேரத்தை அமைக்கவும். குழந்தைகளுக்கு சரியான நேரத்தை அமைத்து கொடுத்தால், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தும் பழக்கம் வளர்க்கப்படும்.

2. கேள்வி கேளுங்கள்

உங்கள் பிள்ளைகள் படித்த பிறகு அவர்கள் என்ன படித்தார்கள் என்று அதுபற்றி கேள்வி கேளுங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் படித்ததன் புரிதலை சிந்திக்கவும், தெளிவுப்படுத்தவும் உந்துதலைப் பெறுகிறார்கள்.

இதையும் படிங்க:  குழந்தையை ஹாஸ்டலில் சேர்ப்பது சரியானதா? ஏன் அந்த முடிவை எடுக்கக் கூடாது தெரியுமா? 

Learning strategies for kids in tamil

3. சத்தமாக வாசிக்க சொல்லுங்கள்

உங்கள் குழந்தை படிக்கும் பாடத்தை சத்தமாக வாசிக்க பழக்கப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் உச்சரிப்பு சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, அவர்கள் நன்றாக புரிந்தும் கொள்வார்கள் மற்றும் அதை நினைவில் வைத்தும் கொள்வார்கள்.

4. புரிந்து படிக்கவும்

மணி கணக்கில் படித்தும் குறைவான மதிப்பெண் தான் எடுக்கிறேன் என்று உங்களுக்கு குழந்தை புலம்புகிறதா? இது ஒரு பெரிய விஷயம் அல்ல.  உங்கள் குழந்தை படிக்கும் பாடத்தை முதலில் புரிந்து படிக்க வேண்டும். புரிந்து படித்தால் தான் படித்தது நினைவில் அப்படியே இருக்கும் அதற்கு ஏதாவது ஒரு டெக்னிக் வார்த்தைகளை பயன்படுத்தலாம் அல்லது சில பொருட்களை நினைவில் வைத்து கூட படிக்கலாம்.

5. காட்சிப்படுத்தி படிக்க வைக்கவும்

உங்கள் குழந்தை படிக்கும் பாடத்தை காட்சிப்படுத்தி படிக்க வைப்பதன் மூலம் அவர்கள் எதை படித்தாலும் அதை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்துக் கொள்வார்கள். உண்மையிலேயே குழந்தைகள் இப்படி படிப்பது நினைவில் வைத்துக் கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும்.

Latest Videos

click me!